பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 95 கடிதத்தையாவது உடனே என்னிடம் கொடுக்கக்கூடாதா? நான் என் மனசிலுள்ள சந்தேகங்களையும் ஆவலையும் நிவர்த்தி செய்து கொள்வதோடு, முக்கியமாக நான் போக வேண்டிய இடத்துக்கு இங்கிருந்தே போகலாமல்லவா? அந்தக் கடிதத்தை நீர் என்னிடம் எப்போதுதான் கொடுப்பீர்?

பஞ்சண்ணா:- ஐயா! நீர் என்மேல் அநாவசியமாகக் கோபிப் பதில் என்ன உபயோகம் என்னை அனுப்பிய மனிதர் உம்மைத் தஞ்சாவூருக்கு அழைத்து வரும்படியாகவும், வண்டி அந்த ஊருக்குள் நுழையுமிடத்தில் அந்தக் கடிதத்தை உம்மிடம் கொடுத்து, உம்மைக் கீழே இறக்கிவிட்டு வரும்படி உத்தரவு செய்திருக்கிறார். ஆகையால் தஞ்சாவூர் போய்த்தான், நான் கடிதத்தை உம்மிடம் கொடுக்க வேண்டும். தயவு செய்து அதுவரையில் கொஞ்சம் பொறுத்துக் கொண்டிரும். அங்கே போனவுடன், கடிதத்தைக் கொடுக்கிறேன். உடனே எல்லாச் சங்கதியையும் தெரிந்துகொள்ளுமேன்.

கலியாண:- (முற்றிலும் வியப்பும், குழப்பமும், கவலையும் அடைந்து) என்ன ஆச்சரியம் இது? எனக்குக் கடிதம் அனுப்புகிறவர் அதை உடனே என்னிடம் கொடுக்கச் சொல்லாமல், என்னைத் தஞ்சாவூருக்கு அழைத்து வந்து அவ்விடத்தில் கொடுக்கச் சொல்லியிருப்பது வேடிக்கையாக இருக்கிறதே! நீர் சொல்வதைப் பார்த்தால், என் மனசில் பலவிதமான சந்தேகங்கள் உண்டாகின்றன. அந்த மனிதர் எனக்கு அனுகூலமானவரல்ல என்பதும் ஒருவாறாக விளங்கு கிறது. நான் ஒர் அவசர காரியமாக பூனா தேசத்துக்குப் போக வேண்டும். நான் போகும் உத்தேசம் நான் முன்னே குறித்த அந்தப் பெண்களுடைய சதியாலோசனைக்கு விரோதமாக இருந்தது. ஆகையால், போகாதபடி என்னைச்சிறைச்சாலையில் அடைத்து வைத்தார்கள். இப்போது இந்த மனிதர் என்னைத் தஞ்சாவூருக்கு அழைத்துவந்து கடிதம் கொடுக்கச் சொல்லி இருப்பதைப் பார்த்தால், நான் பூனாவுக்குப் போகாமல்