பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பு

13





அன்பு காட்டினார். அந்த அன்பின் மலர்ச்சியாக வந்த இன்பப் பேரொளி அவர் முகத்திலே பொங்குகின்றது. அன்பு, அன்பு-இதுவே உலகத்தின் அல்லல்களை யெல்லாம் அகற்றும் மருந்து.

பாரத நாட்டிலே எத்தனையோ சான்றோர்கள் தோன்றி இதை உலகிற்குக் காட்டி யிருக்கிறார்கள். அண்மை காலத்திலே வந்து மறைந்த வடநாட்டு இராமகிருஷ்ண பரமஹம்சரும், தென்னனாட்டு இராமலிங்க வள்ளலும் இதே அன்பு மந்திரத்தைத்தான் நினைவூட்டி யிருக்கிறார்கள். நமது மத்தியிலே வாழ்ந்திருந்த காந்தியடிகள் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும், அரசியலிலுங்கூட அன்பு நெறியைக் கடைப்பிடிக்க வேண்டு மென்று வழி காட்டியிருக்கிறார்.

உலகம் இந்த உயர்ந்த சக்தியைக் கைக் கொள்ளாமல் இன்று கலங்குகின்றது. வழி தெரியவில்லையே என்று கண்ணை மூடிக்கொண்டு தடுமாறுகின்றது. ஆகையால் நாம் உடனே ஒன்று செய்யவேண்டும். உலகத்தின் நோய்க்கு மருந்தாகிய அன்பை யாவருக்கும் வழங்க வேண்டும். நமக்குத்தான் இது எளிதான செயலாகும், இந்த மண்ணிலே அதன் மணம் பழங்காலத்திலிருந்து வீசிக்கொண்டிருக்கிறது. 'அன்பு என்பது ஒன்று உண்டு; அதன் தன்மை அமரரும் அறிதல் அரிது’ என்று இந்த நாட்டிலேதான் நன்கு அறிந்திருக்கிறார்கள். 'பகைவனுக் கருள்வாய்' என்ற கானம் இங்கு முழங்குவதுபோல ஓங்கிய குரலில் வேறெங்கும் முழங்குவதில்லை. ஆதலால், நாம் அச்செயலில் உடனே ஈடுபடவேண்டும். அம்பு முதல் அணுக்குண்டு வரையில் அழிக்கும் படைகளை உண்டாக்கிய உலகம் தனக்கு ஒரு தீராத நோய் இருப்பதை இன்று அறிந்து கொண்டது. அந்நோய்க்கு மருந்து