பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னேற்றம்

31

வகையில் உயர்வு? அவன் கண்டறியாத மின்சார விந்தையும், ஆகாய விமானமும், அணுக்குண்டுகளும் நமக்கு நமது அறிவின் வல்லமையினலே கிடைத்திருக்கின்றன. ஆனால் அவையா முன்னேற்றத்திற்கு அடையாளம்? இன்று மனிதனுக்குப் பலவிதமான வசதிகள் உண்டாகி யிருப்பது மெய்தான். ஆனால் அவையெல்லாம் இருந்து என்ன பயன்? இயற்கையின் சக்திகள் பலவற்றை மனிதன் தன் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்திருப்பதும் மெய்தான். ஆனால் அவற்றைக்கொண்டு அவன் தன்னைத்தானே அழித்துக் கொள்வான் போலல்லவா தோன்றுகிறது? பாரதியார் கூறுகிறார், 'இயந்திர பீரங்கிகளும் சப்மரீன்களும் நாகரிகத்திற்கு அடையாளமல்ல. நிலக்கரிச் சுரங்கங்களும், ஆகாச வெடிகுண்டுகளும் அபிவிருத்திக்கு லக்ஷணமல்ல. அவை மனுஷ்யனுக்குப் பலமல்ல, துணையல்ல. அவை மனிதனுக்குப் பகை. மனுஷ்யனையும் அவனுடைய நாகரிகத்தையும் அழிக்கும் குணமுடையன' என்று.

விஞ்ஞானம் இன்று அற்புதமாக வளர்ந்திருக்கின்றது. உலகத்தை இன்பவீடாகச் செய்யக்கூடிய சக்திகள், வசதிகள் மனிதன் கையில் அகப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை இருந்து என்ன பயன்? மனிதனுடைய உள்ளம் பண்பட்டு வளரவில்லையே! அது இன்னமும் விலங்கு நிலையிலே இருக்கின்றதே.

மனிதன் இன்று பஸ்மாசுரனைப்போல இருக்கின்றான், பஸ்மாசுரன் தன் தவத்தின் பலத்தால் மிகப் பெரிய வரத்தைப் பெற்றான் ஆனால் அறிவில்லாமல் தன் தலையிலேயே கையை வைத்துச் சாம்பராய்ப் போனான். அவனைப்போலவே இன்று மனிதன் விஞ்ஞான வரத்தைப் பெற்றிருக்கிறான். அவன் அந்த விஞ்ஞானத்தால் அழிந்துபோகும் காலம் வராமல் இருக்கவேண்டு