பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

பூவின் சிரிப்பு


மானால் அவனுடைய குரங்குத் தன்மை மாறவேண்டும். உள்ளம் பண்பட வேண்டும், அப்பொழுதுதான் மனித சமூகத்திற்கு உய்வுண்டு; அப்பொழுதுதான் மனித சமூகம் தனது முன்னேற்றத்தைப் பற்றிப் பெருமை கொள்ள முடியும்.

மனிதன் தன்னுடைய நாகரிகத்திற்கும் முன்னேற்றத்திற்கும் அறிகுறியாக வெடிகுண்டுகளையும், டாங்கிகளையும், நீர் மூழ்கிக்கப்பல்களையும் கருதும் வரையில் அவனுக்கு உய்வில்லை. உண்மையில் இன்று அவைகளையெல்லாம் செய்து வைத்துக் கொண்டிருக்கும் மக்களே ஒருவரோ டொருவர் சண்டையிட்டுக் கொண்டு மண்டையை உடைத்துக் கொள்ளுகிறார்கள். ஒருவரை ஒருவர் விரைவிலே அழிப்பதற்குப் போட்டி போட்டுக் கொண்டு வழிகளும் ஆயுதங்களும் கண்டு பிடிக்கிறார்கள். பாமரர்களாகக் கருதப்படும் மக்கள் சமாதானமாக வாழ்கிறார்கள். அப்படி இருக்கும்போது எதை நாகரிகம், முன்னேற்றம் என்று சொல்லுவது?

இன்று மனிதன் டாங்கிகளையும், பீரங்கிகளையும், அணிவகுத்து நிறுத்திப் பெருமைப்படுகிறான். சொந்த இனத்தையே அழித்தொழிக்க எனக்கல்லவா இத்தனை இயந்திரங்கள் இருக்கின்றன என்று இறுமாப்படைகின்றான். ஆனால் எப்பொழுது அவன் இவற்றையெல்லாம் பார்த்துத் தனது அரக்கத் தன்மைக்காக நாணமடைகின்றானோ அப்பொழுதுதான் அவன் நாகரிகம் அடைந்தவனாவான்.

உலகமே ஒரு குடும்பம்; அதில் வாழும் அனைவரும் உடன்பிறந்தோர்; அவர்கள் எல்லோரும் ஒருவர் போல் இன்புற்றிருக்கவேண்டும் என்ற எண்ணத்தின் வளர்ச்சியே மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு