பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

முன்னேற்றம்

உள்ளத்தின் உயரிய பண்புகளாகிய அன்பு, இரக்கம் உடன் பிறப்புணர்ச்சி முதலிய அருங்குணங்களைப் போற்றி ஓங்கச் செய்ய வேண்டும். உலகத்தின் ஒரு கோடியிலே உள்ள ஒரு மனிதன் சோறில்லாமல் வாடுகிறான் என்றால், 'அவனுக்கு உணவளித்துப் பசியாற்றும் வரையில் நான் அன்னத்தைக் கையில் தொடமாட்டேன்' என்று நினைக்கும் உள்ளப்பான்மை எங்கும் காணப்பட வேண்டும். அப்பொழுதுதான் மனித இனம் முன்னேற்றமடைந்ததாகக் கருதப்படும்.

பெரியோர்கள் இதைத்தான் வறுபுறுத்திக் கூறியிருக்கிறார்கள். காந்தியடிகள் போன்ற மாகன்கள் இதையே தான் முழங்கினார்கள். மனிதன் தன் அறியாமையினால் அவர்களுடைய சொல்லுக்குச் செவிசாய்க்க மறுக்கிறான். அவர்களையெல்லாம் பிற்போக்காளர்கள் என்று பேசவும் துணிகிறான்.

ஆனால் இதுவரை உலகத்தையே நடுநடுங்கும்படி செய்துகொண்டிருந்த கொடிய போர் மனிதனுடைய தவறான போக்கை நன்கு மெய்ப்பித்து விட்டது. இன்று கிடைத்திருக்கும் கொடிய படைகள், குண்டுகள் மனித இனத்தின் ஆயுளைச் சோதனை செய்வதற்காகவே தோன்றியிருக்கின்றன. அவற்றை நமது முன்னேற்றத்தின் சின்னமாகக் கருதுவோமா அல்லது அவற்றை நமது இனத்தை அழிக்க வந்த யமனாகக் கருதி ஒழிப் போமா என்பதைப் பொறுத்தே நம் எதிர்காலம் இருக்கிறது.