பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காலம்


'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்து’ என்று மிக எளிதாக எழுதத் தொடங்கி விடுகிறோம்; பேசவும் செய்கிறோம். ஆனால் அந்தக் காலம் என்ன என்பதை அவ்வளவு எளிதில் சொல்ல முடியுமா ? அக்காலத்தை மனத்தினாலேதான் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? காலத்தின் ஆதி எது, அது எப்பொழுது தொடங்கிற்று எப்பொழுது முடியப்போகிறது என்று யாராவது வரையறுத்து உரைக்க முடியுமா?

உயிரினங்களெல்லாம் காலத்திற்குட்பட்டவை என்கிறோம். அது விளங்குகிறது. குறிப்பிட்ட காலத்தில் தோன்றிக் குறிப்பிட்ட காலத்தில் முடிவதை நாம் அறிந்திருக்கிறோம். இறைவனைக் காலங்கடந்தவன் என்று கூறிக் கொள்கிறோம்.இறைவனென்றால் அப்படித்தான் இருக்கவேண்டும் என்று நமது அறிவு கூறுகின்றது; நம் கடவுளாவது காலத்தை வென்றதாக இருக்கட்டும் என்று உள்ளம் ஆசைப்படுகிறது. ஆனல் காலத்தைக் கடந்து ஒரு பொருள் எப்படியிருக்க முடியும் என்று நினைக்கும் பொழுதுதான் மூளை கலங்குகிறது.

காலம் என்பது ஒரு பெரிய கடல்;அதில் எழும் அலையே ஒரு நாள்; அந்த அலை, காலக் கடலிலேயே எழுந்து மேல் தோன்றி அக் கடலிலேயே மறைந்துவிடுகிறது என்று வருணிக்கிறோம். கேட்பதற்கு அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்தக் கடலின் கரைகள் எங்கே? எங்கே தொடக்கம், எங்கே முடிவு