பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

பூவின் சிரிப்பு


 வழிபாடு நடக்கிறது. பண்ணையாட்கள் குழலூதுகின்றனர். எல்லோரும் கைகூப்பி வணங்குகிறார்கள்.

முதலில் பட்டிக் கடவுள் பட்டி ஆவுடையாருக்குப் பொங்கல் படைக்கிறார்கள். பட்டியைச் சுற்றி நீர் தெளித்துக் கொண்டே பட்டியாரை உணவு கொள்ளும் வேண்டுகிறார்கள்.

{{block_center|

கை கழுவு பட்டியாரேகை கழுவு
வாய் கழுவு பட்டியாரேவாய் கழுவு உண்ணுண்ணு பட்டியாரேஉண்ணுண்ணு

என்று உணர்ச்சியோடு பாடி வருகிறார்கள். அடுத்தது மாட்டுக்குச் சோறூட்டுதல்.

பிறகு பட்டிக்குள்ளேயே எல்லோருக்கும் பொங்கல் விருந்து நடக்கிறது. காய்ந்த துவரை மாறு வெளியே குவியலாகக் கிடக்கிறது. அதை அள்ளியிட்டுக் கொழுந்து விட்டெரியும் தீ மூட்டுகிறார்கள். அதுதான் பொங்கலருந்தும்போது வெளிச்சம்.

கண்ணுக்கெட்டிய தொலை வரையில் இந்த வெளிச்சந்தான் ஆங்காங்கே தெரிகின்றன. இந்தக் காட்சி ஒரு தனி இன்பம். எங்கும் இருட்டு. இடையிடையே கொழுந்தாடுகின்ற தீ.

சங்கு முழங்கி ஒலியெழுகின்றது. "பட்டி பெருகுக, பால் பானை பொங்குக!” என்று வாழ்த்தொலி முழங்குகிறது.

பின்னர் மாடுகளுடன் ஒரு விளையாட்டு. பட்டியில் ஒருபுறம் மட்டும் வழிவிட்டு அதில் மாவிலைத் தோரணத்தைக் கட்டிவிடுகிறார்கள். மாடுகளெல்லாம் பட்டிக்குள் இருக்கின்றன. திடீரென்று ஆரவாரமும், கொட்டு முழக்கும் வானைப் பிளக்கின்றன. மாடுகள் மிரண்டு