பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தைப் பொங்கல்

59


அங்கும் இங்கும் ஒடுகின்றன. தோரணத்தை அறுத்துக் கொண்டு அவை வெளியே போகும் வரையில் அவற்றை மிரட்டுவார்கள்.

மாடுகள் வெளியே வருவதை மாடு மேய்ப்பவன் கவனித்துக் கொண்டே இருப்பான். அவன் கை நிறையப் பொங்கல் இருக்கும். மாடுகள் வந்தவுடன் அவன் அதைத் தன் வாயில் போட்டுக்கொண்டு பூமியில் விழுந்து அவற்றை வணங்குவான். 'நீங்கள் கொடுத்த உணவு என்று அவன் கும்பிடுவது நியாயந்தானே?

இந்த வேளையில் பட்டியைச் சுற்றி மாவிளக்கு எடுப்பதுண்டு. வாணங்கள் வானத்தில் ஊசலிட்டேகும், பழம் சூறை விடுவார்கள். பண்ணையாட்களுக்கு அது ஒரு விளையாட்டு, அவர்கள் பழத்தைப் பிடிக்க ஓடி விழுந்து புரளுவார்கள். ஒரே குதூகலம்.

பொங்கல் முடிந்தது. தீப்பந்தங்களைப் பிடித்துக் கொண்டு எல்லோரும் வீடு திரும்புகின்றனர்.

மூன்றாவது நாள்தான் பூப் பொங்கல். இளஞ் சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் தனியாக அன்று வேடிக்கை, ஆட்டம் எல்லாம்.

ஆடவர்களிற் பலர் அண்டையில் பால் எடுத்துக் கொண்டு மாலைக் கோயிலுக்குச் சென்று விடுவார்கள் கடவுளுக்குப் பால் மஞ்சனம் விட்டு ஆட்டுவார்கள்.

பல கிராமங்களுக்குப் பொதுவாக ஒரு மாலைக் கோயில் இருக்கும். அங்கேதான் இன்று பெருங் கூட்டம், ஆண்களின் ஆட்டமும் பாட்டும் அங்கேதான்.

சலகைக் காளை என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மாட்டுப் பொங்கலன்று பிறந்த சேங்கன்றுகளை இறைவனுக்குக் காணிக்கையாக விட்டுவிடுவார்கள். அவற்றிற்கு