பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

பூவின் சிரிப்பு


 கொள்ளப்பட்டு உளவியலிலேயே ஒரு புதுக் கிளை தோன்றியிருக்கிறது. அவர், "நான்கு அல்லது ஐந்தாம் ஆண்டிற்குள்ளேயே மனிதனுடைய முழு அமைப்பும் பெரும்பாலும் முடிந்துவிடுகிறது” என்றார். தாழ்மை உணர்ச்சி (Inferiority Complex)என்ற பின்னலிலே மனிதனின் வாழ்க்கை கட்டுண்டு கிடக்கிறது என்று கருதும் ஆட்லரும் (Adier), குழந்தைப் பருவம் பெரும்பாலும் வாழ்க்கைத் திட்டத்தை அறுதியிட்டு விடுகிறது” என்று சொல்லுகிறார். இவர்களைப் போலவே மற்ற உள ஆராய்ச்சி வல்லுநர்களும் இப்பருவத்தை முக்கியமானதென்று எண்ணுகிறார்கள்.

பள்ளிக்கு வருமுன் குழந்தையின் உளவளர்ச்சி எந்த எல்லை வரை நடைபெறுகிறது என்பதை விரிவாக ஆராய்ந்த கெஸல் (Gesel) என்பார், 'உடல், உள அமைப்பின் போக்கு இந்தப் பருவத்திலேயே முடிவு கட்டப்பட்டு விடுகிறது' என்கிறார், 'ஐந்து ஆண்டுகளுக்கு உட்பட்ட காலமே உடல், உள வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றதாகையால் அதுவே மிக முக்கியமானது' என்று ஸர் ஜார்ஜ் நியூமன் வெளியிட்டுள்ளார்.

பிற்காலத்திலே இந்தப் பருவத்தைப் பற்றிய நினைவு நமக்கு இல்லையென்றாலும், இதுவே நமது வாழ்க்கையை அமைக்கிறது என்பதை மேலே எடுத்துக் காட்டிய உளவியல் அறிஞர்களைப் போன்ற பலரின் வாக்கிலிருந்து உணரலாம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்ற நம் நாட்டுப் பழமொழியும் இதே கருத்தைத்தான் ஒருவாறு குறிப்பாகப் பேசுகிறது. அப்பொழுது ஏற்பட்ட மனப்போக்கைப் பின்னால் வேறு திசையில் மாற்றி அமைப்பதென்பது பெரும்பாலும் இயலாத செயலாகும்.