பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மறந்த பருவம்

65


 ஆதலினாலே அந்தப் பருவத்தில் குழந்தையின் வளர்ப்பு மிக நல்ல முறையில் இருக்க வேண்டும். தாயும் தந்தையும் அதன் முக்கியத்தைத் தெளிவாக உள்ளத்தில் வைத்துக்கொண்டு குழந்தையைப் பேண வேண்டும்.

"அன்னை ஜீஜாபாய் சிவாஜிக்கு அச்ச உணர்ச்சியே தோன்றாதவாறு வளர்த்தாள்: இராமன் போன்ற வீரர்களின் வரலாறுகளைச் சொன்னாள்" என்று நாம் படித்திருக்கிறோம். அவள் சிவாஜியைச் சிறந்த வீரனாக்குவதற்குக் காரணமாக இருந்திருக்கிறாள். இன்று பல தாய் மார்கள் குழந்தையைத் தொட்டிலில் இருக்கும்போதே பூச்சாண்டி காட்டிப் பயங்கொள்ளியாகச் செய்து விடுகின்றனர்.

உலகத்தில் அரிய செயல்களைக் குழந்தை செய்து வெற்றி பெற வேண்டுமானால் அச்சமறியாமல் வளர வேண்டும். இயல்பாக உண்டாகும் அச்ச உணர்ச்சியும் தேய்ந்து மறைந்து விடுமாறு நாம் உதவ வேண்டும். குழந்தையின் மனம் முழுமையாக மலருவதற்கு அன்பும் சுதந்திரமும் வேண்டும். குழந்தையை மிரட்டுவதோ அடிப்பதோ அடியோடு தொலைய வேண்டும். பல தடைகளும் கட்டுப்பாடுகளும் உள்ள இடத்தில் குழந்தையின் உள்ளம் கோளாறுகளுக்கு உட்படுகிறது.

பெற்றோர்களும், குழந்தையுடன் நெருங்கிப் பழகும் உறவினர்களும் வேலைக்காரர்களும் மற்றவர்களும் தங்கள் அறியாமையினால் குழந்தையின் உள்ளத்தில் பல குழப் பங்களை உண்டாக்குவதற்குத் துணை செய்பவர்களாக இருக்கிறார்கள். அவை மறையுள்ளப் பகுதியில் பதிந்து வாழ்க்கையையே பாதிக்கின்றன என்று மறைமனத்தைப் பற்றி ஆராயும் அறிஞர்கள் இன்று ஐயமறக் காட்டு கிறார்கள்.

பூ.சி.5