பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

பூவின் சிரிப்பு


குர் ர் ர் ர்......என்று ஆரோகணம்; இஸ் ர்....இ...ஸ் ஸ் ஸ்.... அஹ் ஹ என்று இப்படி அவரோகணம். மறுகணத்திலே கரியால் ஓடும் பஸ் போல டப டப என்று கிளம்பி டபக்கென்று நின்று விடுகிறது. பிறகு திடீரென்று திருப்பதி ஆண்டவன் கோயில் குரங்கு போல உர் என்று தொடங்குகிறது. உச்ச ஸ்தாயிக்குச் சென்று பலூன் வெடிக்கிறது போல ஓலமிட்டு அடங்கி விடுகிறது.

இப்படி அடங்கும்போதுதான் வேதனை பொறுக்க முடிவதில்லை. அடுத்த விநாடியில் என்ன புதிய அரக்க வடிவிலே புறப்படப் போகிறதோ என்று அஞ்சி உள்ளம் வெடித்துப் போவது போல அடித்துக் கொள்ளுகிறது.

என்னால் கொஞ்சமும் பொறுக்க முடியவில்லை. இவர் போன்ற ஆட்களை எதற்காகத் திருமணத்திற்கு அழைக்கிறார்கள் என்று மாப்பிள்ளை, பெண் வீட்டார்களைச் சீறி வைது கொண்டிருந்தேன். அதனால் ஒரு பயனும் ஏற்படவில்லை.

பிறகு சற்று உரத்த குரலில் 'ஏன் காணும் இப்படி உறுமுகிறீர்?’ என்று சொன்னேன். அத்தனை நாத பேதங்களுக்கும் ஈடு கொடுக்கிற பேர் வழி எனது முணவ லுக்கா செவிசாய்க்கப் போகிறார்? இது கூடத் தெரிய வில்லையே என்று என்னை நானே கடிந்துகொண்டேன்.

அந்த வேளையிலே மனதை அடக்கும் ஆற்றலைப் பற்றி நினைவு வந்தது. யோகிகள் தங்கள் மனதை அடக்கி உலகத்தையே மறந்து விடுவதைப்பற்றி எண்ணிப் பார்த்தேன். உள்ளத்தை ஏதாவதொன்றில் ஆழ்ந்து ஈடுபடச் செய்துவிட்டால் அருகில் என்ன நடந்தாலும் தெரியாதென்று சொல்லுகிறார்கள். இடி,