பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

பூவின் சிரிப்பு


உதவியில்லாமல் விஞ்ஞானிகள், தத்துவ அறிஞர்கள் , ஆராய்ச்சிக்காரர்கள், இத்தனை பெரிய பெரிய உண்மைகளைக் கண்டிருக்க மாட்டார்கள்.

என்ன இருந்தாலும் ஐயத்திற்குக் கொஞ்சம் கண் மங்கல்தான். உண்மையை நேரே பார்க்க அதற்கு இயலாது. கண்ணாடிக் கூண்டிலுள்ள பொருளும் அதற்குப் புலப்படாது. இந்த நிலையிலே அது கண்ணை வேறு மூடிக் கொள்ளும். மூடிக் கொண்டு, தான் சொன்னதையே விடாது பிதற்றிக் கொண்டிருக்கும். கண்ணைத் திறந்து பார் என்றால், பார்க்க வேண்டிய தேவையில்லை. பார்க்காமலே எனக்குத் தெரியும் என்று ஓலமிடும்.

அந்த வேளேயிலேதான் அதன் மேலே எனக்குப் பொல்லாத கோபம் பிறக்கும். அதன் மாலைக் கண்ணைத் தோண்டி எடுத்து விடலாமா என்று ஆத்திரம் உண்டாகும். இருந்தாலும் அதன் உதவிகளை எண்ணிப் பார்க்கும்போது அதைத் தண்டிக்க மனம் வராது. மேலும் இந்த ஐயம் நமது பயணத்திலே இறுதிக் கட்டம் வரையில் கூடவே வருகின்றது. கோபத்திலே அதைக் குருடாக்கி விட்டால் பிறகு வழி நடக்கும்போது தொல்லை நமக்குத்தானே?

இப்படியெல்லாம் எண்ணிப் பார்க்கும்போதுதான் ஐயத்தை ஒதுக்கித் தள்ளிவிடுவதையோ தண்டிப்பதையோ விட்டுவிட்டு அவ்வப்போது சமாதானம் செய்யவேண்டுமென்று ஏற்படுகிறது. அந்த முறையிலே தான் சாவில்லை என்பதை நான் மெய்ப்பிக்க நினைக்கிறேன்.

பாரதியார், அப்பர், அருணகிரிநாதர் போன்ற பெரியவர்கள் சாவில்லை என்று சொன்னபோது அவர்கள் இந்த உடலைப்பற்றி எண்ணமிட்டுக் கொண்டிருக்கவில்லை. இந்த உடலோடு கூடிய வாழ்வு அற்ப மனித