பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாவில்லை

81

னுக்குத்தான் சர்க்கரையும் வெல்லமும் போன்றது. மகான்களுக்கு இது பெரிதல்ல. உடம்பில்லாமலும் சாகாதிருக்கும் வாழ்க்கையையே அவர்கள் நாடினார்கள். சுவாமி ராமதீர்த்தர் ஒரு பெரிய ஞானி. ஒரு நாள் அவர் என்னவோ நினைத்துக் கொண்டார்; நேராகக் கங்கைக்குச் சென்றார். "டேய் யமனே, இந்த உடலை எடுத்துக்கொள். எனக்கு ஆயிரங்கோடி உடல்கள் இருக் கின்றன. இந்த ஓருடல் வேண்டியதில்லை, எடுத்துக் கொள்" என்று ஆற்றிலே பாய்ந்துவிட்டார்; ஆனால் அவர் சாகவில்லை.

அப்பர் முதலிய அடியார்களும், சிறந்த கவிகளும், கலைஞர்களும் அவரைப்போலத்தான் சாகா திருக்கின்றனர். நைந்து போகும் இந்த உடலைத் தூக்கி எறிந்து விட்டு அவர்கள் என்றும் இருக்கிறார்கள். ஏசுமு னியைச் சிலுவையில் அறைந்த மூடர்களுக்கு இந்த உண்மை தெரியாமையால்தான் அவர் இறந்து விட்டதாக மனப்பால் குடித்தார்கள்.

யமனுக்குக் கூற்றுவன் என்பது தமிழ்ப் பெயர். உடலையும் உயிரையும் கூறுபடுத்துபவன், அதாவது பிரிப்பவன் என்பது பொருள் அவன் ஆற்றல் அதனுடன் நின்றுவிடுகிறது. அவனால் உடலையும் உயிரையும் பிரிக்க முடியுமே ஒழிய யாரையும் சாகும்படி செய்ய முடியாது. நமக்கு மட்டும் துணிவும் முயற்சியும் இருந்தால் ஆயிரம் ஆயிரம் அரிய செயல்களைச் செய்து சாகாதிருக்கலாம். ஆருயிர்களுக்கெல்லாம் அன்பு செய்து என்றும் இருக்கும் நிலை எய்தலாம்; கலையும் கவிதையும் தீட்டிச் சிரஞ்சீவி யாகலாம். மனிதன் உடம்பல்ல. மனிதன் ஆன்மா, அவன் இறைவனோடு ஒட்டிய ஒரு பகுதி. மனிதனுக்குச் சாவில்லை.

பூ.சி.—6