பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

எங்கள் வீடு


த்தனை ஆர்வம், எத்தனை குதூகலம், எத்தனை பெருமையோடு நான் வீடு கட்டினேன்; என் மனைவியும் நானுமாக இந்த வீடு கட்டுவதைப்பற்றி எத்தனை ஆண்டுகள் எத்தனையெத்தனை இன்பக் கனவுகள் கண்டுகொண்டிருந்தோம்! 'எங்கள் வீடு' என்று உரிமையோடு சொல்லிக்கொள்ள நாங்கள் எத்தனை காலம் துடித்துக்கொண்டிருந்தோம்; இறுதியாக எப்படியோ அந்தக் கனவுகள் நனவாகிவிட்டது. ஒரு வீடு எங்களுக்கே உரியது என்று ஏற்பட்டுவிட்டது. நாங்கள் அதிற் குடிபுகும் நன்னாளை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்,

ஆனால் நாங்கள் புதுமனை புகுவிழாவை நடத்துவதற்கு முன்பே இரண்டு சிட்டுச் குருவிகள் ஆணும் பெண்ணுமாக அந்த வீட்டில் குடிபுகுந்துவிட்டன. நல்ல நாள் ஒன்றும் அவை பார்த்ததாகத் தோன்றவில்லை. என்னுடைய எழுத்துவேலைக்காகத் திட்டமிருந்த அறையில் அவை வசதியாக இடம் பார்த்து அவற்றின் குஞ்சுகளுக்காக வெதுவெதுப்பான தனிப்பட்ட சிறிய வைக்கோல் மண்டபமும் ஏற்பாடு செய்துகொண்டன. வீட்டில் ஒவ்வொரு பாகமும் அவற்றிற்கே சொந்தம் என்ற மமதையோடு அவை வாழ்ந்துகொண்டிருந்தன.

ஆசையாக இருந்தாலும் என்னால் அவற்றைப் போலக் கதவின் மேல் ஏறி உட்கார முடியுமா? அல்லது மின்சார விசிறியின் அலகுகளின் மேலே ஒய்யாரமாக அமர்ந்து காற்று மெதுவாக வீசுகையில் ராட்டினம்