பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கந்தா ஒளி

89


 எழுந்து உன்னைக் காணப் பறந்து வருவாள் என்று நம்புகிறாயா? ஐயோ! இந்த நம்பிக்கை என்னும் மாய மனப் பாங்கு எத்தனை ஆறுதல் அளிக்கிறது. எத்தனை ஏமாற்றமும் அளிக்கிறது! புரையோடிய புண்ணை எப்படியெல்லாம் மூடி மூடித் திறக்கிறது! இருந்தாலும் இந்த நம்பிக்கைதானே உயிருக்கு ஒரு தனிவலிமை?

நீ என் இனத்தினை இப்பொழுது முற்றிலும் வெறுத்துப் புழுங்கிக் கொண்டிருக்கிறாய். மனிதனைக் கல் மனப்பேய் என்று கூறுகிறாய். அன்பு என்னும் பசையே கண்டறியாத பாலைப்பதர் என்கிறாய். இன்னும் என்ன வெல்லாம் சொல்லி ஏசுவாயோ?

குயிலா! நீ எதற்காக இப்பொழுது இந்த மரத்துக்கு வந்தாய்? உன்னுடைய பாட்டெல்லாம் எங்கே? உன் காதலியோடு செத்துவிட்டதா? இந்த மரக்கிளைகளிலே என்ன தேடுகிறாய்? ஆவலோடு தத்தித் தத்தி ஒவ்வொரு கிளையாக ஏன் போகிறாய்?


உங்கள் காதல் வாழ்க்கையின் காட்சிகளெல்லாம் இந்த மரத்தைக் கண்டவுடனே, உன் உள்ளத்திலே தோன்றுகின்றனவா? அந்தக் காட்சிகளின் நினைவிலே நீ களிப்படைகிறாயா? கசிந்து உருகுகிறாயா? அந்த நினைப்பு மேலும் மேலும் உனக்குத் துன்பந்தானே விளக்கும் ? இந்த மரத்திலே நீ தங்கியிருந்து எத்தனை எத்தனை இன் பப் பாட்டைப் பொழிந்திருச்கிறாய்? அந்தப் பேதைக் குயிலியின் செவிகளிலே இன்பப் போதையை இங்கிருந்துதானே பாய்ச்சினாய்? உனது இன்னிசையில் மயங்கித்தானே குயிலி உன்னிடம் ஒடிவந்தாள்? உனது பாட்டே அவளுக்குக் கூற்றுவனின் தூதனாக மாறியதைக் கண்டு உனது குரலையே நீ வெறுக்கிறாயா?

இந்த மரக்கிளைகளில் அமர்ந்து எத்தனை நாட்கள் நீ என் உள்ளத்தில் நவ நவமான இன்பக் கிளர்ச்சிகளைப்