344 பூமாவைத் தன்னுடன் வரவழைத்துக் கொள்ள வேண்டி எவ்வளவோ எடுத்துச் சொன்னதுண்டு அவனிடம். சில மாதங்கள் தனிமை தேவை என்றும் அப்பொழுதுதான் அவன் மனம் பழைய நிலைமைக்கு வரமுடியும் என்றும் கூறவே, சரி? என்று இருந்துவிட்டார்கள். பூமா கர்ப்பவதியாயிருந்தாளே... என்ற மின்னல் பளிச்சிட்டது அவனுக்கு, அவன் நிலே அதிர்ந்து போன்ை. ‘பூமா!...தெய்வமே, பூமா பெற்றுப் பிழைத்துக் குழந்தையுடன் சுகமாயிருப்பாளல்லவா? ஏன் இப்படி என்னேக் கொல்லாமல் கொல்கிருய்?...தனியே வெந்து மடியும் அவல நிலைக்கு ஆளாகாமல் அன்றே நான் நினேத்த படி என் வாழ்வு முடிந்திருந்தால்...!" வாழ்க்கைப் பயணத்தின் கடைசிக் கோட்டில் நின்ற அவனே, வாழ்வின் புதிய அத்தியாயத்தின் தலைவாயிலில் கொணர்ந்து நிறுத்திய சம்பவம் அவனே மறுபடியும் ஆட் கொண்டது. - பூமாவை எப்படியும் தேடிக் கண்டுபிடித்து, அவளிடம் மன்னிப்புப் பெற்று, புதுவாழ்வு தொடங்கவேண்டுமென்ற ஆசைக் கனவில் ராஜேந்திரன் மிதக்கத் தொடங்கினன். டைரக்டர் சந்திரமெளலி உடல் தேறியதும், ஸ்டுடியோப் பொறுப்புகளே அவர் வசம் ஒப்புவித்துவிட்டுப் புறப்பட வேண்டுமென்று திட்டம் வகுத்தான். எதிர்காலம் கனவுலக மாகக் காணப்பட்டது. அந்தக் கனவுலகிலே அவன் , பூமா, பிஞ்சுக்குழந்தை-அத்துடன் இன்னெரு உருவம்...! நினைவுபடர்ந்தது. இன்னொரு உருவம்...! அப்படியே நடந்துவிட்டால்...கனவு மாளிகை பெரிதாக உயர்ந்தது. இன்ைெரு உருவம்...!’ அவன் பெருமூச்சு உதிர்த்தான். அவனது துடித்த விழிகளைச் சுற்றிலும் கண்ணிர்-ஆனந்தக் கண்ணிர்! அவுன் மனத்தடியில் அமைதி கரை காட்டி நின்றது.
பக்கம்:பூ மணம்.pdf/150
தோற்றம்