பக்கம்:பூ மரங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சிரித்தது. செந் தீ இரவு 11 மணி இருக்கும். எங்கும் இருள். இருளிடையே பழுத்த ஒளிக் கணி போல எலெக்ட்ரிக் லேட்டுகள் சிரிக்காத செங்குளம் ஊரில் கனத்து கவிந்திருந்தது இருட்டு. தெரு மூலைக்கு மூலே பகட் டாக வெளிச்சம் போடுகிற கேஸ் லேட்டுகள் கூட அங்கு பொதுவாக பெரிய பெரிய நகரங்களிலேகூட தாராளமாக எலெக்ட்ரிக் லைட் கால் பாவாத காலம் அது. சினிமாக்கள் மக் களுக்கு இரவிலே வேலே கொடுக்காத காலம். சில நகரங் களில் எப்போதாவது பயாஸ்கோப்' என்று துணியிலே நிழ லாடும் அற்புதத்திை மலர வைத்துக் காட்டிய பருவம், நாகரிகம் வளர்ந்துகொண்டிருந்தது. போது ஆகிப் பூவாகவேண்டிய அரும்பு நிலையில்தானிருந்தது நாகரிகம். ரயிலும் காரும் நாகரிக இறக்குமதி செய்துகொண்டிருந்த நகரங்களிலேயே அப்படியென்ருல், ரயில் நிலையத்துக்குப் பத்து மைல் தள்ளியிருந்த - ஒரு நகரத்துக்கும் மற்ருெரு முக்கிய நகருக்கும் காரோடும் பாதை நடுவிலிருந்த-செங் குளம் ஊரில் நாகரிகம் முளைவிட்டுச் சிறிது தலைகாட்டிய ஆரம்பநிலையில் இருந்தது என்ருல் அதில் வியப்பேதுமில்லை. செங்குளம் பட்டிக்காடு அல்ல. பட்டிக்காடு மில்லை; பட்டணக் கரையுமில்லை என்று சொல்வார்களே அதுமாதிரி "இரண்டுங் கெட்டான் நிலையிலிருந்த ஊரும் இல்லை. சாதா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/10&oldid=835679" இலிருந்து மீள்விக்கப்பட்டது