பக்கம்:பூ மரங்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鑫 வசத்தம் மலர்ந்தது விட்டு மறைந்து போவதென்ருல்-அவளிடம் அவனுக்கு ஆசை இல்லயா? அத்தான் என்னை வெறுத்ததே இல்லையே. அத்தானுக்கு என்மீது கோபமோ, வருத்தமோ கிடை யாதே. இங்கே யாரிடமும் கோபமிருக்க நியாயமும் இல்லை. இந்தக் கல்யாணத்தில் இஷ்டமில்லை யென்ருல், முதலிலேயே சொல்லியிருக்கலாம். இஷ்டமில்லையென்று எ ப்ப டி ச் சொல்ல முடியும்? அத்தான் ஏன் திடீரென்று, யாரிடமும் சொல்லாமற் கொள்ளாமல் ஒடிப்போக வேண்டும்?-அவ வது பிஞ்சு உள்ளம் இவ்விதம் அலேமோதிக் கொண்டிருந்தது அடிக்கடி, கனவிலும் நனவிலும் ராஜம் தன் அத்தானை நினைத்தே ஏங்கித் துடித்தாள். சில சமயங்களில் அவளே அலறித் துடிக்க வைத்ததே அந்தக் கனவு...கனவிலே வந்து பயமுறுத் திய மூகம்... அவள் உடல் குலுங்கியது. இப்போது பண்ணை 2ார் முகத்திலேகூட அதே பயங்கரம்...நடுக்கும் கோரக் கனலின் தகதகப்பு மறுபடியும் அவளேக் குலுக்கி எடுத்தது அந்த திப்ேபு, அவள் உடல் பதறுவதை உணர்ந்த நீலாவதி மகளைத் தன் உடலோடு நன்கு அணைத்துக் கொண்டாள். ஏனம்மா உன் உடல் நடுக்குது இப்படி? ஏன்?’ என்று கொஞ்சும் குர வில் குழைவாகக் கனிவாகக் கேட்டாள். ஒண்ணுமில்லே’ என்ற பாவனையாகத் தலையை ஆட்டினுள் ராஜம், "படுக்கிறதா இருந்தா படுத்து துரங்கேன்...லச்சுமி!...” "இந்தா வந்திட்டேன்' என்று குரல் வந்தது. அதைத் தொடர்ந்து வந்தாள் லக்ஷ்மி, வரும் பொழுதே காப்பிப் பாத்திரமும் டம்ளரும் எடுத்துக் கொண்டு. "நீயே கொண்டு வந்திட்டியா? இதுக்குத்தான் கூப்பிட் டேன்...இதையெல்லாம் கீழே வச்சிட்டு, ராஜம் படுக்குற துக்கு படுக்கை... .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/101&oldid=835683" இலிருந்து மீள்விக்கப்பட்டது