பக்கம்:பூ மரங்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீலாவதி அடிக்கடி உச்சரித்திருக்கிருள் செல்லம் பண் டிதர் பெயரை. பண்ணே யார் பேச்சில் அடிபட்டுள்ளது அந்த பெயர் தாண்டவராய பிள்ளேயும் ராஜமும் மற்ற வர்களும்கூட செல்லம் பண்டிதர்......செல்லம் பண்டிதர்' என்று சொல்விக்கொண்டிருக்கிருர்கள். இவர்கள் மட்டு மல்ல, செங்குளம் ஊர் பூராவுமே போற்றிப் புகழ்பாடும் கெளரவம் பெற்ற பூரீமான் செல்லம் பண்டிதரை நாமும் அறிமுகம் செய்து கொள்ள வேண்டியது அவசியம் தானே! கடவுள் இருக்கிருரோ இல்லையோ ஏடுகளும் பக்தர் களும் முழங்குகிறபடி எல்லா சக்திகளும் அந்தக் கடவுளுக்கு உண்டோ இல்லையோ-செங்குளத்து மக்களுக்குத் தெரி யாது. ஆல்ை அவர்கள் கடவுளேப் பற்றி சந்தேகித்தது கூட இல்லையே! முன்னுேர்கள் செய்த தவப் பயனுல் இவர்கள் வாழ்க்கை இந்த மண்ணிலே இயங்குகிறது என்ற நம்பிக்கை யுடன் திரிபவர்கள் முன்னேரது பாவ, புண்ணிய கர்ம விக்னகளுக்கேற்ப தங்கள் வாழ்க்கையை ஆட்டிவைக்க ஒரு கடவுள் அல்ல, பனப்பல கடவுளர்கள் உண்டு என்று நம்பி விழுந்து கும்பிட்டு பக்தி பண்ணியல்லவா வாழ்கிருர்கள்!... கடவுளர்கள் பட்டியலில் மேலும் மேலும் பெயர்களே இணைத்துச் செல்வதில் இந்த வட்டாரத்தினருக்கு ரொம்ப திருப்தி. சேர்மன் சாமி, அந்தச் சாமி, இந்தச் சாமி என்று கோயில் கட்டத் துணியும் அவர்கள் செல்லம் பண்டிதருக்கும் ஒரு கோயில் ஏற்படுத்தத் தயங்க மாட்டார்கள் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/113&oldid=835711" இலிருந்து மீள்விக்கப்பட்டது