பக்கம்:பூ மரங்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது # 1 3 சொல்லலாம்! கடவுளிடம் அவர்களுக்கு உள்ள நம்பிக்கைக்கு சிறிதளவும் குறையாத-அதைவிட அதிகமாகக்கட-நம் 岛 3. குறை 多 t பிக்கை இருந்தது பண்டிதரிடம். மக்கள் குறை தீர்த்து வழிகாட்ட வந்த செல்லம் பண் டிதர், மந்திர, தந்திர, யந்திர வித்தைகளே அவர் தொழி லாகக் கையாண்டு வந்தவுடன், நாட்டு வைத்தியம் என்கிற கலேயை உப தொழிலாகவும் கொண்டிருந்ததஞல் அத்த ஊர்க்காரர்களுக்கு அவர் தயவு அதிகம் தேவைப்பட்டது. எல்லோருக்கும் துணை அவர். கைக்குழந்தைக்கு சிறு இழுப்பு: அல்லது யாருக்காவது காய்ச்சல், இல்லே, வீட்டு ஐயாவுக்கு ஏதாவது வியாதி-இப்படி என்ன எழவு வந்தா லும் சரி ஆள் பறக்கும் பண்டிதர் வீடு நோக்கி; வீட்டுக்கு புதிதாக வந்த மக்களுக்கு பேய்க் குற்றம்...பெண்ணுக்கு ஏதேனும் கோளாறு...செய்வினை வைத்து விட்டதாக சந்: தேகம் .....இவை போன்ற விஷயங்களுக்கும் செல்லம் பண் டிதரின் துணைதான் அவர்களுக்கு வேண்டியிருந்தது. பொது, வாக கிராம வாசிகளின் நம்பிக்கையும் சந்தேகங்களும் உண் டாக்குகிற சகல பிரச்னைகளேயும் தீர்த்து வைத்து, நல்ல வழி காட்டக்கூடியவர் பண்டிதர் தான் என்று நம்பிஞர்கள் ஊர்க்காரர்கள். அதற் கப்புறம் தான் கடவுளர்கள் மீது பாரத்தைப் போடுவார்கள், செல்லம் பண்டிதரை அவர்கள் கடவுளாக மதியாமல், கடவுளுக்கு அடுத்தபடியாகக் கருது வதன் காரணம் அவர் இன்னும் செத்துப் போகாமல் பூத உடலோடு அவர்களிடையே நடமாடுவது தான். செல்லம் பண்டிதரின் சிரித்த முகம்-நரையோடிய தலே மயிரும், மீசையும், ஒளி மிதக்கும் கண்களும், காவியேறிய பற்களும், குங்குமப் போட்டு திகழும் நெற்றியும்-பார்த்த வர்களின் பயத்தைத் தீர்த்து வைக்கும் நல் மருந்து: கட்டம் போட்ட சிவப்புப் பட்டு லேஞ்சி வல்லாட்டு இருபுறமும் ஆட, ஒரு கை அவரது மருந்துப் புட்டிகளும் டப்பிகளும் அடங்கிய சிறு பொட்டணத்தை மார்புடன் அனைத்து வர, அவர் மெது நடை நடந்துவரும்போதே தங்களைப் பிடித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/114&oldid=835713" இலிருந்து மீள்விக்கப்பட்டது