பக்கம்:பூ மரங்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. விசாரணை தாண்டவராய பிள்ளே முதலில் பந்தல்காரனைத்தான் கூட்டி வரும்படி ஆளனுப்பினர். ஆளுல் கந்தத்தேவன் பக் கத்து கிராமம் எதற்கோ போயிருக்கிருன், விளக்கு வைக்கும் நேரத்திற்கு வீடு திரும்பிவிடுவான், வந்ததும் தகவல் தெரி விக்கிருேம் என்று வீட்டிலிருந்தவர்கள் சொல்லி அனுப்பி விட்டார்கள். "சரி, வரட்டுமே! என்று தலையாட்டினர் தாவன்ன' அவர் மத்தியானம் சாப்பிட்டு விட்டு, ஒரு கண்ணுக்குத் துரக்கம் போட்டு விழித்தெழுந்து, காப்பி சாப்பிட்டும் மயக் கம் தெளியாத கிறக்க நிலையிலேயே உட்கார்ந்திருந்தார். வெளியே எசமான் இருக்காகளா?' என்ற கேள்வி பிறந்த தும், யாரது?’ என்ற பதில் வெட்டை வீசினர் பிள்ளை. "நான் தான் எசமான்-செல்லம்..." என்ற பதில் உருண்டு வரவும், ஒ செல்லம் பண்டிதரா! வாரும் வே, வாரும் என்று வரவேற்பு பாடியவண்ணம் எழுந்து, துண்டு ஒன்றைஇழுத்து மேலே போர்த்து திண்ணேக்கு வந்தார். செல்லம் பண்டிதர் கும்பிடு போட்டு நின்ருர், எசமான் என்னை வரச்சொன்னி களாமே. என்ன விசேஷம்?’ என்றும் கேட்டார். "என்னவே, நீரு இந்தப் பக்கமே எட்டிப் பார்க்கக்கூடா துன்னு வச்சிட்டீரா!...உட்காரும்...ஏன் நிக்கேரு!’ என்று சொல்லி, தான் ஈஸிசேரில் சாய்ந்தார் தாவன்ஞ. வரப் படாதுன்னு ஒண்னுமில்லே, எசமான். எனக்கு சோலி சரியா யிருக்கு. என்ன செய்றது? அலைச்சல், கவலைகள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/123&oldid=835733" இலிருந்து மீள்விக்கப்பட்டது