பக்கம்:பூ மரங்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 123 என்ன எழவெல்லாமோ வேலைகள் என்று அடுக்கிளுர் பண்டி தர், தரையில் உட்கார்த்தபடி. கையிலிருந்த வெற்றிலேச் செல்லத்தையும்-அது நிறையச் சூரணங்களும் செந்தூரங் களும் மாத்திரைகளும் சிறு புட்டிகளில் அடைபட்டுக் குடி யிருந்தன-காவி திறக் கைக்குட்டைப் பொட்டணம் ஒன்றை யும் (இதில் மந்திரச் சாமான்கள் கட்டுண்டு கிடக்கும்) கீழே வைத்தார். தாவன்னு மெதுவாகப் பேச்சு கொடுத்தார்: "என்னவே உம்ம தொழிலெல்லாம் எப்படி நடக்கு? பண்டிதர் சிரித்தார். தன் இருகைகளையும் தேய்த்துக் கொண்டே சொன்னுர், என்னவோ உங்களைப் போல உள்ள முதலாளிகள் தயவிஞலே எப்படியோ கழியுது" என்று, ‘எங்க தயவு என்ன! உம்ம திறமையும் குணமும்தான் உம்ம டேகிலே எல்லோருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கு இல்லையா?* 'ஏதோ ஊர்க்காரங்க பிரியம் அவங்க அன்பு வச் சால்...' என்று இழுத்தார் பண்டிதர். 'கம்மவா சொன்னுன்-ஊரு ஒண்னு பட்டா கூத்தாடிக் குக் கொண்டாட்டம்னு என்று தாவன்ன கணேத்தார். அவ ரது பண்பாட்டைப் புரிந்து கொள்ளாத பண்டிதர் தலையைச் சொரிந்தார். ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக்கொண் டாட்டம் அப்படின்னு சொல்லுவாங்க, ஒன்றுபட்டால் எப் படி?’ என்று கேட்டும் தீர்த்து விட்டார். ஊம் என்று யோசித்தார் பிள்ளை. வெகுநேரம் யோசிக்கவில்லை இதுகூடத் தெரியலியா உமக்கு ஊரு பூரா ஒன்று கூடித் திரண்டு நிக்கிற இடத்திலே கூத்தாடிக்கு காசு 莎琳 அதிகம் கிடைக்குகா இல்லேயா? என்ன நான் சொல்றது? : அதுவும் சரிதான் என்று ஒத்து ஊத நேர்ந்தது பண்டி தருக்கு, எசமான் என்னைக் கூப்பிட்டனுப்பியது ஏன்? அதை இன்னம் சொல்லலியே?’ என்று விசாரித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/124&oldid=835734" இலிருந்து மீள்விக்கப்பட்டது