பக்கம்:பூ மரங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது . 盈荔 தீ நாக்குகள் அகோரப் பசியுடன் நீண்டு நக்கின. வெறி யோடு தாவின. ஒளிமயப் பாம்புக் குட்டிபோல ஆயிரமா யிரம் தீக்கொழுந்துகள்! மின் மாதின் கர்வ நாட்டியம்போல ஒளிப் பிழம்பின் நடனம்! பந்தலுள் கிடந்த லஸ்தர்கள், குளோபுகள், சர விளக்குகள் எல்லாம் நொறுங்கி விழுந்து வெடித்தன.

  • பிரப்பம் பாயில்லா! நின்று எரியும் சவம். லேசிலே தீப் பிடியாது. பிடிச்சா பேயால்லா எரியும்’

"எப்படித் தீப் பிடிச்சுது? "சர விளக்கிலே பிசகு ஏற்பட்டுப் பிடித்திருக்குமோ? 'இல்லை. அவுட்டுப் பொறி வந்து விழுந்திருக்கும். இந் தப் பக்கமாக ஒரு வாணக் குழாய் பாய்ந்து வந்ததே." "ஆமா. அப்படித்தான் இருக்கும்." "இருக்குமென்ன! அதுதான் விஷயம்!” 'முடிவு கட்டிப்போடாதே ஐயா இப்படி லேசிலே. எவளு வது தி வச்சிருந்தா?” - - 'கல்யாண வீட்டுப் பந்தலிலே போயி எவளுவது தீ வைப் பாளு? நீ என்னடா...!" 'திடீர்னு தீ பிடிப்பானேன்? இவ்விதம் வீண் பேச்சுப் பேசிக் கொண்டிருந்தார்கள் பலர். வேடிக்கை பார்ப்பதிலும் வம்பளப்பதிலும் எல்லாருக் கும் உற்சாகம்தானே! "தண்ணி...தண்ணி எடுத்து வா...ஏய், வீட்டிலே பற்றிக்கிடாமே பாருங்கோ...அணை சீக்கிரம்-இப்படிப் பல கூச்சல்கள். செயலேவிட கூச்சல்தான் பலமாக இருந்தது. மற்றத் தெருக்களிலிருந்தும் திமு திமு' வென்று ஓடிவந்தார்கள் மனிதர்கள். தூங்கிக்கொண்டிருந்தவர்கள்கூட எழுந்து ஓடிவந்தார்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/14&oldid=835767" இலிருந்து மீள்விக்கப்பட்டது