பக்கம்:பூ மரங்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாங்கு மூஞ்சி மரம் என்டரலோபியம் சாமான் பழைய பெயர் (ஒத்த பெயர்); சமானியாசமான் அல்லது பித்தேகொலோபியம் சமான் குடும்பம்: லெகுமினேசியே (பாப்லியோசிையே) பொதுவாக வழங்கும் இந்தியப் பெயர்கள் : இந்தி, வங்காளி-வெளிநாட்டு சிரிஸ் மலேயாளம்-பிளவு தமிழ்-தூங்கு மூஞ்சி மரம்; ஆமை வாகை சமானியா என்பது சமான் என்ற ஸ்பானிஷியப் பெயரிலிருந்து வந்தது. வளருமிடம் : மத்திய அமெரிக்கா, மேற்கிந்தியாவைச் சேர்ந்தது. வெப்பமிக்க இந்தியப் பகுதிகளிலும் சிறப் பாக வங்காளத்திலும் வளர்கின்றது. இயல்புகள் : உச்சியில் முடிபோன்று பரந்து தழைக்கும் எடுப்பான மரம். பட்டை சொர சொரப்பாக இருக்கும். இலைகள் நீளமானவை. கிளே நுனியில் அடர்ந்திருக்கும். நல்ல வெயில் இருந்தால் சிற்றிலைகள் நிமிர்ந்திருக்கும். குரியனுடைய கதிர்களும் நுழைய முடியாதபடி இலகள் அடர்ந்து நிழல் தரும். இரவிலும், வெளிச்சமில்லாத போதும் இலேகள் மடிந்து ஒரு பக்கமாக மூடிக்கொள்ளும். இம் மரத்தின் அடியில் ஈரமாக இருப்பதால் இத&ன மழைமரம் என்பர். கிளே நுனியில் இளஞ் சிவப்பு நிறப் பூக்கள் கலப்பு மஞ்சரியில் கொத்தாகத் தோன்றும். மார்ச் முதல் செப்டம்பர்வரை பூவின் தாதிழைகள் நீண்டிருப் பதால் பட்டுக் குஞ்சம் போல் தோன்றும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/153&oldid=835799" இலிருந்து மீள்விக்கப்பட்டது