பக்கம்:பூ மரங்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியாண முருங்கை எரித்ரைன இண்டிகா குடும்பம்: லெகுமினேசியே (பாப்லியோசியேன) பொதுவாக வழங்கும் இந்தியப் பெயர்கள் : இந்தி-பங்ரி, டடாப், பாரட் வங்காளி-பலிடா. முந்தார், ரக்தமாடர் மலையாளம்-மந்தாரம், கிம்ப தரு தமிழ்-கலியாண முருங்கை எரித்ரைனு என்பது கிரேக்க மொழியில் சிவப்பு என்று பொருள்படும். இதன் பூக்கள் மிகவும் சிவந்தவை. இண்டிகா என்பது இ ந் தி யா ைவ ச் சேர்ந்தது என்பதாகும். வளருமிடம்: இதன் தாயகம் நம் நாடே. பீகார், வங் காளக் கடலோரக் காடுகள், இமயமலைப்புறம் முதலிய விடங்களில் காணப்படும். பர்மா, அந்தமான், நிக்கோ பார், ஜாவா, போலினிசியா முதலியவிடங்களில் கூட வளர்கிறது. இயல்புகள்: நெருங்கிய கிளைகளையுடைய விரைவில் வளரும் சிறு மரம். அடி மரமும், கிளேகளும் வழவழப் பான பட்டை உடையவை. மூன்று சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலே. கிளைகளின் நுனியில் பூக்கள் கொத் துக் கொத்தாக மலரும். மலர்கள் கை விரல்களை நீட்டி யிருப்பதுபோலத் தோன்றும். பிப்ரவரி, மார்ச் அல்லது ஏப்ரல் வரை, இலே உதிர்ந்தவுடன் பூக்கும். கனி: சனி .ே முதல் 12 அங்குலம் வரை நீண்டு வளைந்து கூரியதாக இருக்கும். பிஞ்சு பச்சையாக இருக்கும். முற்றியவுடன் கருமை நிறம் அடைந்து பத்துப் பன்னி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/159&oldid=835811" இலிருந்து மீள்விக்கப்பட்டது