பக்கம்:பூ மரங்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 54 பூ மரங்கள் ரண்டு விதைகளுடன் இருக்கும். ஒவ்வொரு விதைக் கும் இடையில் கனி ஓடு சுருங்கியிருக்கும். இம்மரம் இதன் அழகிய பூக்களுக்காக வளர்க்கப்படுகின்றது. தளிர்களைக் கறி சமைக்கலாம் என்பர். இதன் மரம் விளை யாட்டுச் சாமான்கள் செய்ய உதவும். சண்டிகாரில் சாலே ஓரங்களில், பூங்கா, தோட்டங்களில் அழகு மரமாகப் பயிரிடப் படுகின்றது. தோட்டக் குறிப்பு: விதையிலிருந்தும், கிளே நட்டும் வளர்க் கலாம். வறண்ட நிலத்தில் வளரக் கூடியது. விரை வாக வளரும். கிளே நட்டு வளர்க்கும் மரங்கள் முதலாண் டிலேயே பூக்கும். மரம் வலுவில்லாதது. பெருங் காற் றடிக்கும்போது ஒடிந்து விழும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/160&oldid=835815" இலிருந்து மீள்விக்கப்பட்டது