பக்கம்:பூ மரங்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டுத்தீ மரம் பூட்டியா பிராண்டோசா (பூட்டியா மோனே ஸ்பெர்மா) குடும்பம் : லெகுமினேசியே (பாப் லியோனேசியே) பொதுவாக வழங்கும் இந்தியப் பெயர்கள் : இந்தி-டாக், பலாஸ், சால்சா, காங்ரி வங்காளி-கிளுகா, பலாஸ், போலாவி குஜராத்தி-காக்டா, காக்ரா, காக்ரியா கன்னடம்-முட்லுகா, பிரம்ம விருகrம் மலையாளம்-பிரும்ம விருகrம், முரிகு, ஷாமதா மராத்தி-பலாஸ், காக்ரசா, பாலசின்மதா ஒரியா-கிஞ்சுகோ பஞ்சாபி-பலக் சாச்ரா தமிழ்-புரசு, புரசம், காட்டு முருக்கு தெலுங்கு-மொடுகா, மொடுகு பூட்டியா என்பது பூட்மண்டலத்துப் பிரபு ஜான் ஸ்டு வர்ட் என்பவரின் பெயரினைப் பின்பற்றியது. பிராண் டோசா என்பது இலே நிறைந்த என்று பொருள்படும். வளருமிடம்: புல்லடர்ந்த காடுகளிலும், தரிசு நிலங்களி லும் இங்கும் அங்குமாக வளரும். பர்மாவிலும், இலங் கையிலும் வளர்கிறது. இயல்புகள்: இது நடுத்தர உயரமுள்ள இலேயுதிர் மரம். வளர்ச்சியிலும், வடிவத்திலும் ஒழுங்கற்றது. அடி மரம் முடிச்சு முடிச்சாகக் கோணலாக இருக்கும்; பட்டை பழுப்பு நிறமும், நார் போன்றதுமாகும். இலைகள்: மூன்று சிற்றிலைகளை உடைய கூட்டிலே. சிற் றிலைகள் அகன்று, சொர சொரப்பாக இருக்கும். காம்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/164&oldid=835822" இலிருந்து மீள்விக்கப்பட்டது