பக்கம்:பூ மரங்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 64 பூ மரங்கள் இயல்புகள்: ஈரமுள்ள கிழக்கிந்தியப் பகுதிகளில் வள ரும். பெரிய இலேயுதிர் மரம் வறண்ட பகுதிகளில் 15 முதல் 20 அடி உயரம் வரை வளரும். அடி மரம் குட் ைட யா ன து. உச்சி வட்டமாகக் கிளேக்கும். கிளேகள் வழவழப்பான சற்றுக் கரிய சாம்பல் நிறப் பட்டையுடையவை. இலைகள், மேலே நல்ல பச்சை நிறமாகவும் கீழே வெளிர்ப் பச்சையாகவும் இருக்கும். இவை கொஞ்சம் கொஞ்சமாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இலே உதிர் வதற்குமுன் சிவப்பாக மாறிவிடும். பூக்கள் கவர்ச்சியாக இருக்கும். இளஞ்சிவப்பு அல்லது ஊதா சிவப்புப் பூக்கள் விரிந்து உதிரும்போது வெளுத்துப் போகும். பூக்கள் ஒரு அடி முதல் இரண்டடி வரை நீள மான கலப்பு மஞ்சரியில் உண்டாகும். அகவிதழ் சற்று. மடிந்து சுருங்கியிருக்கும். அதல்ை இதற்கு மடிப்புப் பூவென்ற பெயருமுண்டு. ஏப்ரல் மே மாதங்களிலும், ஜூலை ஆகஸ்டு மாதங்களிலும் பூக்கும். கணி: முற்றியவுடன் 5 அல்லது 6 பகுதிகளாக வெடிக் கும் கனி, புறவிதழ் கனியின் அடியில் சுருங்கி ஒட்டிக் கொண்டிருக்கும். தட்ப நாளில் கனி முதிரும். சற்றுப் பழுப்பு நிற விதைகள் சிறகு போன்று விரிந்திருக்கும். பச்சை நிறப் பிஞ்சு முற்றிக் கருப்புக் கனியாகி பல நாள் மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். இதன் மரம் தேக்கு மரத்திற்கு அடுத்தப்படியாகக் கருதப்படும். படகு கட்டுவதற்கும் வண்டி செய்யவும் இம்மரம் பயன்படும். விதை மயக்கம் தரும், பட்டையும், இலையும் பேதி மருந்தாகப் பயன்படும். அந்தமான் தீவில் இதன் கனி வாய்ப்புண்ணே ஆற்றுவதற்குப் பயன் படுகிறது. இலேயும், காயும் தோல்பதனிடும் பொருள் காய்ச்சப் பயன்படும். இது ஒரு சிறந்த அழகு மரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/170&oldid=835836" இலிருந்து மீள்விக்கப்பட்டது