பக்கம்:பூ மரங்கள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனிச்சம் (இந்தியப் பூக்களில் தலைசிறநதது) I 55 அழகான பூக்களுக்காகச் சாலே ஓரங்களில் வளர்க்கப் படுகின்றது. தோட்டக் குறிப்பு: இம்மரம் விதையிலிருந்து மிக எளி தாக வளரும். முதலாண்டில் இது மெதுவாக வளரும். அடுத்தடுத்த ஆண்டுகளில் விரைவாக வளரும். ஒரு ஆண்டில் நாற்றைப் பிடுங்கி நடலாம். நட்ட 5 ஆண்டு களில் பூக்கும். பக்கக் கிளேகளே நறுக்கி விடவேண்டும். இல்லாவிடில் இது பெரும் புதராகுமேயன்றி மரமாக வளராது. நல்ல கரிய சத்துள்ள நிலத்தில் நன்கு வளரும். சாதாரண வெளிச்சம் வேண்டும். நிழலில் நன்கு வளராது. இதில் இன்னுெரு கம்பீரமான இனம் ஒன்றுண்டு. அதற்கு லாகர்ஸ்ட்ரோமியா தோரெல்லி என்று பெயர். இது ஜூலே முதல் செப்டம்பர் வரை வெண்மையான அல்லது சிவப்புப் புள்ளி விழுந்த பூக்களைச் சொரியும். இது குட்டையான புதர்போன்றது. விதையிலிருந்து வளரும். சண்டிகாரிலும், லக்னேவிலும் அதிகமாக வளர்க்கப்படுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/171&oldid=835838" இலிருந்து மீள்விக்கப்பட்டது