பக்கம்:பூ மரங்கள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பூ மரங்கள் இவை ஜூலை மாத இரவில் மலர்ந்து நடுப் பகலுக்குள் உலரும். கணி: சுரைக்காய் போன்று பெரிய காயின்மேல் நுண் னிய பசிய மயிரடர்ந்திருக்கும். பஞ்சு போன்ற சதைப் பற்ருன இதன் உட்பகுதியில் பல விதைகள் உள்ளன. இவற்றைச் சுற்றி ஒரு நார்ப் பொருள் உள்ளது. இது ஒரு நல்ல நிழல் தரும் மரம் ; பல நாள் வாழும். இதன் பட்டைக்குட்புறத்தில் உள்ள நார் கயிறு திரிக்கப் பயன் படும். காயின் புளிப்பான சதைப்பற்றை உண்ணலாம். அதிலிருந்து ஒருவகைப் பானம் தயாரிப்பர். காய், வயிற்று நோய்க்கு மருந்தாகவும் சொறிகளே நீக்கவும் பயன்படும் குஜராத்தில் மீன் பிடிக்கும் வலேக்கு மிதவையாக இதன் கனிகளைப் பயன்படுத்துவர். சாதுக்கள் இதனேக் குடுவை யாக உபயோகிப்பர். இலைகளையும் தின்னலாம் என்பர். மரத்துண்டு கடற் பஞ்சுபோன்று மெதுவானது; கட்டு மரம் செய்ய உதவுகிறது. தோட்டக் குறிப்பு: விதைத்து வளர்க்கப்படும். பூங்காவில் தனியாக வைத்து வளர்த்தால் அழகாக இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/174&oldid=835841" இலிருந்து மீள்விக்கப்பட்டது