பக்கம்:பூ மரங்கள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவரசு தெஸ்பீசியா பாபல்னியா பழைய பெயர் (ஒத்த பெயர்) ஹைபிஸ்கஸ் பாபல்னியஸ் குடும்பம் : மால்வேசியா (கோர்ரியா) வேறு பெயர் : பேஷியா மரம், டுலிப் மரம் பொதுவாக வழங்கும் இந்தியப் பெயர்கள் : இந்தி-பெந்தி, பீபல் வங்காளி-பொராஷ், பராஷ், தும்லா, கஜசுண்டா குஜராத்தி-பெக்தி, பரசபிப்லோ கன்னடம்-அரசி, ஹவர்சி மலேயாளம்-சந்த மரம் மராத்தி-பெக்தி, ரான்பெந்தி ஒரியா-குஞ்சாவ்ஸ்டோ பஞ்சாபி-பஹாரி பீபல் பராஷ் பீபல் தமிழ்-பூவரசு தெலுங்கு-கால் கையாவி ’தெஸ்பீசியா என்பது தெய்வத் தன்மை உடைய என்று பொருள்படும். தெஸ்பியாசிஸ் என்ற கிரேக்க மொழிச் சொல்லின் அடிப்படையில் பிறந்தது. இம் மரத்தை மாதா கோயில்களைச் சுற்றி வளர்ப்பார்கள். பாபல்னியா என்பது இதன் இலை வடிவத்தைக் குறிக்கும். தென்னிந்திய மாநில்ங்களில் அதாவது சென்னே, மைசூர், கே ர ளா வில் அதிகம். மர்மா, மலேயா, ஆப்பிரிக்காவிலும், பசிபிக் தீவுகளிலும் காணப்படுகிறது. சண்டிகாரில் சாலே ஓரங்களில் வளர்க்கப்படுகிறது. இயல்புகள்: எப்போதும் தழைத்திருக்கும் பெரிய மரம் (30-40 அடி). அகன்ற கரும் பச்சை இலைகள். பெரிய, மஞ்சள் நிற, மணி வடிவப் பூக்கள். பருத்திச் செடியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/178&oldid=835848" இலிருந்து மீள்விக்கப்பட்டது