பக்கம்:பூ மரங்கள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்னுேலியா மக்னேலியா ஸ்டெல்லேட்டா குடும்பம் : மக்னேலியேசியே பொதுவாக வழங்கும் வேறு பெயர் : சம்பா இது பரந்த கிளைகளையுடைய வன்மையான சிறு மரம். இலைகள் 2.5 அங்குல நீளமும் சற்று முட்டை வடிவமும் உள்ளது. இலே நுனி விரிந்த கோணமானது. தளிர்களின் அடியில் நுண் மயிர் அடர்ந்திருக்கும். ஒரு அடி உயர மாக இருக்கும்போதே இம் மரம் நிரம்பப் பூக்க ஆரம் பிக்கும். சிறு பூக்காம்புள்ள வெள்ளிய பூக்கள் நல்ல மணமுள்ளவை. அக விதழ் குறுகி நீண்டு விரிந்து மடிந் திருக்கும். கனியில் வளமுள்ள சூல் அறைகள் மிகக் குறைவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/182&oldid=835857" இலிருந்து மீள்விக்கப்பட்டது