பக்கம்:பூ மரங்கள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 பூ மரங்கள் காற்றைத் தூய்மைப் படுத்துவதில் சிறந்தது. சில சமயங் களில் இதன் தண்டிலிருந்து மரச்சாறு வடியும். கனி: ஒரு அங்குல நீளமுள்ளவை. மஞ்சள் நிறமான ஒரு விதைக் கனி. மழை பெய்ததும் ஒருவித வாடை அடிக்கும். சாலைகளுக்கும், பூங்காவிற்கும் ஏற்ற நிழல் மரம். இதன் பழுப்பு நிறப் பிசின் மருந்துக்கு உதவும். விதையிலிருந்து வேப்ப எண்ணெய் எடுக்கப்படும். அது குஷ்ட நோயுக்கும் (தொழு நோய்), சரும நோய்களுக் கும், சோப்பு செய்யவும் பயன்படும். பிண்ணுக்கு நல்ல உரமாகும். எலுமிச்ச மரத்தின் நோயுக்கு நல்ல மருந்து. இலச்சருகு பெட்டிகளில் உள்ள பூச்சிகளே விரட்டும். தளிர் காயங்களே ஆற்றும். சிறுகுச்சிகளைக் கொண்டு பல் துலக்கலாம். வங்காளத்தில் இலேயை உண்பார்கள். மரம் கெட்டியானது; தச்சு வேலைக்கு உதவும். தோட்டக் குறிப்பு: உப்பு நிறைந்த பகுதிகளுக்கும், வறண்ட பகுதிகளுக்கும் ஏற்ற மரம். மரம் மிகவும் பெரி தாகி விட்டால் மேல் கிளைகளை டிசம்பர், ஜனவரியில் வெட்டிவிடலாம். மார்ச் மாதத்தில் துளிர் விட்டுக் கிளேத்து விடும். விதைபோட்டு முளைக்க வைத்து வளர்ப் பர். நெடுநாள் வைத்திராமல், உடனே விதையை விதைத்து விடவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/185&oldid=835862" இலிருந்து மீள்விக்கப்பட்டது