பக்கம்:பூ மரங்கள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருங்கை மொரிங்கா ஒலிபெரா பழைய பெயர் (ஒத்தபெயர்): மொரிங்கா டெரிகோஸ்பெர்மா குடும்பம் : மொரிங்கேசியே பொதுவாக வழங்கும் இந்தியப் பெயர்கள் : இந்தி, வங்காளி-சோன் ஜளு, சொகன் ஜன, சுஹாஞ்ளு, சைன்ஞன் மலேயாளம்-சாக்தா, ஷாக்தா தமிழ்-முருங்கை தெலுங்கு-முங்கா மொரிங்கா என்பது இதன் தமிழ்ப் பெயரின் அடிப் படையில் எழுந்தது. ஒலிபெரா என்பது எண்ணெய் உள்ள என்று பொருள்படும் லத்தீன் மொழிச் சொல்லின் அடியாகப் பிறந்தது. டெரிகோஸ்பெர்மா' என்பது இதன் விதையின் விதைத்தோல் சிறகு போன்று விரிந் திருப்பதைக் குறிக்கும், கிரேக்க மொழிச் சொல்லின் அடிப்படையில் எழுந்தது. வளருமிடம்: மேற்கு இமயப் பகுதியும் அயோத்திப் பகுதியும் இதன் தாயகம். இந்தியா முழுவதும்பொதுவாக வளரும். இயல்புகள்: நல்ல தோற்றமுள்ள இலேயுதிர் மரம். பட்டை கார்க்கு போன்று சொர சொரப்பானது. இலேகள் பெர&ணயிலே போன்று பலமுறை பிரிந்த கூட்டிலே. பிப்ரவரி-ஏப்ரல் மாதத்தில் இது பூப்பதற்கு முன் சிறிது காலம் இலேயற்றிருக்கும். பாலாடை போன்ற வெள்ளிய பூக்கள் மணமுள்ளவை. கொத்துக் கொத்தாக இலே களுடன் தோன்றும். காய் மூன்று மாதத்தில் முதிரும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/190&oldid=835874" இலிருந்து மீள்விக்கப்பட்டது