பக்கம்:பூ மரங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 13 பிடித்தது என்று தான் தெரியலே என்று தான் ஒவ்வொரு வரும் சொன்னர்கள். "இதிலே என்ன தெரிய வேண்டியிருக்கு அவிட்டு வானக் குழாய் வந்து விழுந்து அணையாமலே கனிஞ்சிருக்கு. புகைஞ்சு புகைஞ்சு பளீர்னு பத்திக்கிடுச்சு...' என்று கூட யிருந்து கவனித்தவர் போல் விளங்கச் செய்தார் பண்ணே иштѣ, ஒருத்தி கேட்டாள்: ஆமா, அப்படிப் புகைஞ்சுக்கிட் டிருந்தா தெரியாமலா போயிரும்!” - பண்ணையார் அவளது அசட்டுத்தனத்தால் கோபமுற்ற வர் போல் முறைத்தார்: "ஹெ, என்ன பேச்சுப் பேசுதே நீ! வீட்டுள்ளே இருந்தவங்களும் விழுந்தடிச்சுப் படுத்துத்துங் கிரீைங்க. பந்தல் உள்ளே யாராவது ஒன்றிரண்டு பேர் இருந்திருக்கலாம். அவங்ககூடத் துரங்கிக்கிட்டுத்தான் இருந் திருப்பாங்க, சத்தம் கேட்டதும் தான் எழுந்திருந்து மிரள மிரள முழிச்சிக்கிட்டு நின்றிருப்பாங்க, தெரியாதா! இந்த லெட்சனத்திலே யாரு பந்தல் உயரே பார்த்திருக்கப் போருங்க? என்ன நான் சொல்றது:” பண்ணோர் சொன்னது ரொம்பத் தெளிவாகப்பட்டது அங்கிருந்தவர்களுக்கு. - 'இதைப் பத்தி போலீஸ்லே எழுதி வைக்கலாமா? என்று யாரோ கேட்டார்கள். எழுதி வச்சு என்ன செய்ய! யாராவது தீ வச்சிருந்தால் அல்லது தீ வைத்துவிட்டான் என்று யார் மேலாவது சந் தேகம் இருந்தால் எழுதி வைக்கலாம். இப்பதான் ஊர்க் காரங்க எல்லோருக்கும் தெளிவாத் தெரியுது, நம்ம ஏட் டய்யா கூடச் சொன்னுரு, வாணக் குழாய் வந்து விழுந்து தான் புடிச்சிருக்கு தீ அப்டீன்னு. தற்செயலான விபத்து, அதை யாரு தடுக்க முடியும்? தெய்வமாப் பார்த்து... . பண்ணையார் பழைய கதியிலேயே பேச்சைத் திருப்பியது நீலாவதிக்குப் பிடிக்கவில்லே போலும்! பெருமூச்செறிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/20&oldid=835895" இலிருந்து மீள்விக்கப்பட்டது