பக்கம்:பூ மரங்கள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவல் IS) 3 இ8லகளில் நுண்ணிய புள்ளிகள் தோன்றும். ஜனவரிபிப்ரவரி மாதங்களில் இலே உதிரும். பூக்கள் மங்கலான வெள்ளே நிறம், மணமுள்ளவை; இலேகளுக்குக் கீழே நுனிவளர் பூங்கொத்தாக மார்ச் முதல் மே வரை மலரும்: ஜூன்-ஜூலே மாதங்களில் கனியுண்டாகும். கனி கருநீல மானது. வழவழப்பானது. இனிய சதைப்பற்றுள்ளது. சில கனிகள் துவர்ப்பாக இருக்கும். இம்மரம் பெரிதும் நிழலுக்கும், கனிக்கும் வளர்க்கப்படும். சாலேகட்கு ஏற்ற தன்று. சிறுவர்கள் இதன் கனிக்காக வந்து கிளேகளே ஒடித்து நாசம் செய்வர். மரம் கெட்டியானது. விறகுக் கும், விவசாயக் கருவிகள் செய்வதற்கும் பயன்படும். பட்டை துவர்க்கும். வாய் கொப்பளிப்பதற்கு இதன் டிகாக்ஷன் பயன்படும். பட்டையிலிருந்து சாறு எடுத்த உடனே ஆட்டுப்பால் கலந்து குழ ந் ைத க ளு க் கு க் கொடுக்க வயிற்றுப் போக்கு குணமாகும். இலே ஆடு மாடுகளுக்கு உணவாகும். இலேயில் இருந்து ஒருவித எண்ணெய் எடுப்பர். விதை நீரிழிவிற்கு நல்ல மருந் தென்பர். கனிச்சாறு கொண்டு சாராயம், காடி தயாரிப்பர். தோட்டக் குறிப்பு: மழை நாளில் விதைத்து வளர்க் கலாம். முதலில் வளர்ச்சி மிக மெதுவாக இருக்கும். பின்னர் நன்கு வளரும். இள மரங்கள் மூடுபனி தாங்க மாட்டா. 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/200&oldid=835897" இலிருந்து மீள்விக்கப்பட்டது