பக்கம்:பூ மரங்கள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலுப்பை மதுக்கா லாட்டிபோலியா பழைய பெயர் (ஒத்த பெயர்): பாசியா லாட்டிபோலியா குடும்பம் : சபோட்டாசியே பொதுவாக வழங்கும் இந்தியப் பெயர்கள் : இந்தி, வங்காளி, மராத்தி-மொஹ்வா, மஹாவா மலேயாளம்-இலுப்பா தமிழ்-காட்டு இலுப்பை, இலுப்பை தெலுங்கு-இப்பா பாசியா என்பது இத்தாலி நாட்டில் பொலோக்ளுவி லுள்ள தாவரத் தோட்டத்தின் கண்காணிப்பாளராக இருந்த பர்னுண்டோ பாசியா என்பவரின் நினைவில் எழுந்தது. லாட்டிபோலியா என்ருல் இலே அகன்றது என்பது பொருள். வளருமிடம்: மத்திய இந்தியாவில் பொதுவாகக் காணப் படும்; உத்தரப் பிரதேசம், இமயமலையின் அடியோரத் தில் ரவி முதல் குமான் வரையிலும் இதையும் மாமரத் தையும் உத்தரப் பிரதேசம் எங்கும் காணலாம். இயல்புகள்: இலேயுதிரும் பெருமரம். பட்டைச் சுருக்கங் களுடன் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும். இலேகள் தோல் போன்று தடித்துக் கிளே நுனியில் கொத் தாக இருக்கும். இளந்தளிர் சிவந்த செம்பு நிறமாக பிப்ரவரி-மார்ச் மாதங்களில் அழகாகத் தோன்றும். பூக்கள் வெளிர் மஞ்சள் நிறமானவை. பிப்ரவரி-ஏப்ரல் மாதங்களில் இலையற்ற நிலையில் இரவில் மலர்ந்து காலேயில் உதிரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/204&oldid=835904" இலிருந்து மீள்விக்கப்பட்டது