பக்கம்:பூ மரங்கள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 பூ மரங்கள் காய், பச்சை நிறம்; பாலுடன் இருக்கும் ; ஜூன், ஜூலை மாதங்களில் கனியாகும்; உண்ணலாம். இது ஒரு காட்டு மரம். உத்தரப் பிரதேசத்தில் இப்பூக்களே விவசாயிகட்கு உணவாகும். மத்திய இந்தியாவில் உள்ள காடுகளில் வளரும் மக்களும் இதை உண்கின்றனர். இப் பூவைப் பற்றிய பல குறிப்புக்கள் மத்திய, கிழக்கு இந்திய நாட்டுப் பாடல்களில் உள்ளன. இவற்றைப் பச்சையாகவும், வேக வைத்தும், இனிப்புப் பண்டம் செய்தும் உண்பர். சில சமயம் இதிலிருந்து சாராயமும் காய்ச்சுவர். விதையில் இருந்து எண்ணெய் எடுப்பர். நெய் போன்றிருக்கும். எனவே இதனை வெண்ணெய் மரம் என்றும் கூறுவர். எண்ணெய் விளக்கு எரிக்கப் பயன்படும். பிண்ணுக்கு எருவாகும். பட்டை, சாயம் போடப் பயன்படும். இம்மரத்தின் பால் வாத நோய்க்கு நல்லது என்பர். தோட்டக் குறிப்பு: விதையில் இருந்து பயிரிடப்படும். நாற்று நட்டால் வளர்வதில்லே. எனவே நன்ருக வளர்ந்த பின்னர் மாற்றி நடவேண்டும். மிகவும் மெது வாக வளரும். கன்றுகள் குளிர் தாங்காது. சாலேயில் நிழல் தர மிகவும் ஏற்ற மரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/205&oldid=835906" இலிருந்து மீள்விக்கப்பட்டது