பக்கம்:பூ மரங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛尊 வசந்தம் மலர்ந்தது "ஐாம், நடந்ததோ நடந்து போச்சு, அதுக்கு என்ன செய் தது: ராஜம் கல்யாணம் இப்படி முடியும்னு யாரு கண்டா? என்று முனங்கிளுள், அவள் தன் மகள் கல்யாணம் தடயுடலாக ஆரம்பித்த வைபவத்தை எண்ணிப் பார்த்து மறுபடியும் பெருமூச்செறிந் தான் தனது ஒரே மகள் ராஜத்துக்கு கல்யாணம் செய்து பார்த்து விடுவது என்ற ஆசை எழுந்தது, மற்றவர்கள் தடை செய்தது, கேவிபேசியது எல்ல்ாம் போகட்டும். அவற்றை அவள் பொருட்படுத்தியவள் அல்ல. கல்யாண ஏற்பாடுகள் ரோம்பப்பிரமாதம். கொட்டகைப் பந்தலில் அன்றுகாலையில் ேெசிய மனிதர்களும், பணக்காரர்களும், உறவினர்களும்கூடி கிளிர்ந்த காட்சிதான் என்ன! அந்தி வானத்து வண்ண ஜாலங்கன்போல் டாலடிக்கும் விதவிதமான வர்ணப்பட்டு கள் மினுக்குதல்கள்! வாத்திய கோஷங்கள்! மணவறை" விலே ராஜமும் அவளுக்கு ஏற்ற மணமகனும் ஜோடியாக இருந்த கண் கொள்ளாக் காட்சி! ஆகா... எப்படி மனம் பூரித்துப் போயிருந்தாள் அவள், எவ் அளவு சந்தோஷம், எவ்வளவு பெருமை பொங்கி வந்தது அவளுக்கு! நீலாவதி மகளுக்கா கல்யாணம். அவ தாசி தானே! என்று அலட்சியம் செய்யாமல் ஊர்ப்பிரமுகர் களும், பக்கத்து ஊரிலிருந்து பணக்காரர்களும், பெரிய மனி தர்களும் விஜயம் செய்து சிறப்புவித்த பெருமையை எண்ணி எண்ணி ஆயுள் பூராவும் மகிழ்ந்து போகலாமே என்று நினைத் திருந்தான் அவன். மத்தியானம் நடந்த நலங்கு: ஊமத்தம்பூக் குழாய் நிமிர்ந்து நின்ற பூனைக் கிராப் பெட்டி (என்ன இருந் தாலும் அவளுக்கு இன்னும் அந்தப் பெட்டி பெயரைச் சரி யாகச் சொல்ல வரலியே என்ற எண்ணம் எழவும் அசட்டுச் சிசிப்பு தெளித்தது உதட்டில்!) அந்தப்பெட்டி சுப்புத்தாயி ஜம் சண்முகவடிவும் பாடிய பிளேட்டுகளை ஒலிபரப்பிக் கொண்டிருந்தது...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/21&oldid=835916" இலிருந்து மீள்விக்கப்பட்டது