பக்கம்:பூ மரங்கள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பில்கான் பைகஸ் இன்பெக்டோரியா குடும்பம் : அர்டிகேசியே லத்தீன் மொழியில் பைகஸ் என்ருல் அத்தி என்று பொருள். வளருமிடம்: உத்தரப் பிரதேசத்திலும், புது டில்லியிலும் அதிகமாக வளர்க்கப்படுகிறது. ஈரமுள்ள பகுதிகட்கு ஏற்றது. இயல்புகள்: எப்போதும் தழைத்திருக்கும் பெரிய நிழல் தரும் மரம் ; 35-40 அடி உயரமானது; பசுமையான, சாம்பல் நிறமுள்ள பட்டையுடையது. விழுதுகள் விடும். ஏப்ரல் மாதத்தில் இளஞ் செம்பு நிறமுள்ள இலைகள் தோன்றும். இலேகள் எதிர் எதிராக ஒன்றுவிட்டொன்று தோன் றும். இலே நுனி திடீரென மெல்லியதாகி நீண்டு இருக்கும். பழுத்த கனி வெண்மையானது. மரம் சாம்பல் நிறம் ; கெட்டியானது ஆலுைம் நீண்டு உழைக்காது. தோட்டக் குறிப்புகள்: விதைகளிலிருந்தும், கிளே நட்டும் வளர்க்கப்படும். கிளேயில் இருந்து வளரும் மரத்தின் முடி தாழ்ந்திருக்கும்; ஒழுங்காகக் கிளேக்காது. ஆதலின் விதையில் இருந்து வளர்ப்பது நன்று. சாலைக்கு ஏற்ற நிழல் தரும் மரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/210&oldid=835917" இலிருந்து மீள்விக்கப்பட்டது