பக்கம்:பூ மரங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 21 'திருச்செந்தூர் சண்முகவடிவு மாதிரி பிளேட் கொடுத் துப் புகழ்பெற வேண்டாமா உன் மகள்?' என்று பண்ணை யார் கேட்ட கேள்வியும் அவள் மனதை உறுத்தாமல் இல்லை... அந்த நலங்கு! வாண்டுக் குட்டிகளின் கூத்தாட்டம்... வந்து குவிந்த அன்பளிப்புகள்...பந்தலில் கியாஸ் லேட்டுக’ ஏற்றியதும் முன்னல் வரிசை வரிசையாக அடுக்கி வைத் திருந்த வெள்ளிப் பாத்திரங்களின் மினுமினுப்பு... எல்லாம் இனிய கனவு மாதிரித் தோன்றியது இப் போது. பிரத்தியட்ச உண்மையாக அவளே உலுக்கியது எகி றிப் பாய்ந்து ஒளி நாட்டிய மாடி ஒடுங்கி இருந்த தோன். அவள் கண்களைக் கூசச்செய்த தீயின் நினைவு உள்ளத்தைக் கறுக்கியது. அவள் பார்வை கட்டிலில் படுத்திருந்த ராஜத் தின்மேல் புரண்டது. . அவள் நெளிந்து புரண்டாள். தெளிவில்லாத, புரியாத, ஆனல் பக்கத்திலிருக்கிறவர்கள் உணர்வைக் கிளறி, உள் ளத்தை அறுக்கிற பயங்கரமான, கூச்சல் ஒன்றைக் கத்தி ள்ை. வேதனையில் திண்டாடி, வேதனையின் தன்மையை வாய்விட்டுக் கதறிச் சொல்ல முடியாமல் ஊமையலறலாக ஒலிபரப்புகிற மிருகம் போல் கூச்சலிட்டாள். எல்லோரும் என்னது? என்ன?’ என்று பதறிப்போய் கட்டிலருகில் ஓடினர். "புள்ளெ பயந்திட்டுது, பாவம், ஏதாவது துர்ச்சொப் பனம் கண்டிருக்கும்!’ என்ருர் பண்ணையார். எல்லோரும் ராஜம், ராஜம் என்று கூவினர். - அவள் திகைத்துப் போய் எழுந்து உட்கார்ந்தாள். அவள் தேகம் உதறலில் நடுங்கியது. அவள் பார்வை அர்த்த மற்று, தெளிவற்று, கலவரமும் தூக்கக் கிரக்கமும் கலந்து நெளிந்தது. அவள் தொண்டை அடைத்துக் கொண்டது போல் திணறிள்ை. பிறகு எங்...எங்...எங்கேருக்கேன் நான்? என்று கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/22&oldid=835936" இலிருந்து மீள்விக்கப்பட்டது