பக்கம்:பூ மரங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 荔? கல்யாணம் சிறப்பாக முடிந்தது. அதைப் பொருத வயிற்றெரிச்சல்காரர்களின் பொறுமலே கொதிப்புற்று வந் தது போல தீ பிடித்துக் கறுக்கிவிட்டது. போதும் போதாத தற்கு மாப்பிள்ளை இப்படிப் பண்ணிவிட்டான்! ரத்தினம் இப்படிச் செய்வான் என்று அவள் எதிர்பார்க் கவேயில்லை. அவன் அவளுக்கு உறவினன்தான். அவனுக்கு சொந்தக்காரர்கள் வேறு யாருமில்லை. சிறு வயசில் அவனேப் போஷித்துப் பாதுகாத்தாள் நீலாவதி. திடீரென்று ஒருநாள் அவன் ஒடிப்போய் விட்டான். அப்போது அவனுக்கு வயது சுமார் பத்துதான் இருக்கும் பல மாதங்கள் அவனைப்பற்றிய தகவலே இல்லாமலிருந்தது. ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ந்திருப்பதாக விஷயமறிந்தவர்கள் சொன்னர்கள். தமிழ் நாடெங்கும் திக் விஜயம் செய்து வெற்றிக்கொடி நாட்டிய, அந்த பால கான விநோத சங்கீத சபா இலங்கைக்குப் படை யெடுத்தபோது மாஸ்டர் ரத்தினமும் கப்பலேறிஞன். அங்கு ஒரு வருஷம் டேராப் போட்டு விட்டு, தமிழ்நாடு திரும்பிய போது இலங்கை, யாழ்ப்பானமெல்லாம் புகழ் தீரன் நானே' என்று பாடக்கூடிய தெம்பு ஏற்பட்டிருந்ததுடன், சிலிர்த்துச் சுருண்டு படியாமலே நிமிர்ந்து நின்ற ராஜபார்ட் கிராப்பு மிருந்தது. மாஸ்டர் ரத்தினவேலு அயன்ராஜபார்ட் மாஸ் டர் ரத்தினப்பா என்று மாறியிருந்ததும் முக்கிய விஷயம். கம்பெனி திவாலாகி, கம்பெனி முதலாளிகளே சீன்களை விற்றுச் சாப்பிட வேண்டிய நிலைமை ஏற்பட்டபோது, மாஸ் டர் ரத்தினப்பா செங்குளம் கிராமத்தைத் தேடி வரவேண் டிய அவசியம் ஏற்பட்டது. காலில் ஸ்லிப்பரும், மூக்கிலே கண்ணுடியும், முறைத்து நின்ற கிராப்பும், டிரங்குப் பெட்டி யும் கையுமாக செங்குளத்தில் இறக்குமதியான அயன் ராஜ பார்ட் நீலாவதி விட்டில் காலடி வைத்ததும் அவள்ே. கணம் திகைத்துப் போளுள். என்ன அத்தை செளக் என்று பிள்ளையாண்டான் திருவாயைத் திறம் ளுக்குப் புரிந்தது. அட் நம்ம ரத்தின்ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/28&oldid=835985" இலிருந்து மீள்விக்கப்பட்டது