பக்கம்:பூ மரங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்த்தது 茲劉 அவன் திரும்புகிறபோது அந்த ஊரிலே ஒரு ஸ்பெஷல் நாட கம், அதுச்காகப் போயிருந்தேன்-நம்ம பழைய முதலாளி வரச்சொல்லி எழுதியிருந்தாரு போனேன். கம்பெனி ஆரம் பிச்சாலும் ஆரம்பிக்கலாம்னு சொன்னுரு" என்று ஏதாவது சமாதானமும் சொல்விக்கொண்டு நுழைவான். நீலாவதி சரி தான் என்று தலையாட்டி வைப்பாள். வேறு என்ன செய் வது: அவளுக்கு தாளுகவே ஒரு சந்தேகம் எழுந்தது. அதை ஊர்ஜிதம் செய்வது போல அவ்வப்போது ஒன்றிரண்டு பேர் சொல்வார்கள்: ரத்னம் இருக்கானே அவன் பழைய நாட கக்காரி கோமளம் கூட சுற்றித் திரிகிருளுமே மிஸ் கோம ளம்கூட அவனைப் பார்த்தேனே என்று - திடீரென்று ரத்னப்பா வெளியூர் விஜயங்களை நிறுத்தி விட்டான். சரிதான், அந்த மிஸ்ஸும் இந்த மாஸ்டரை கவனிக்கலே போலிருக்கு, பையனிடம் பணமில்லை என்று தெரிஞ்சிருக்கும் என்று செங்குளம் துப்பறியும் புலிகள் யூகம் செய்து கொண்டார்கள். மாதங்கள் ஒடின. மாஸ்டர் ரத்னப்பா சாதாரண ரத்ன மாகி நல்ல டையணுக மாறிவிட்டது. நீலாவதிக்குத் திருப்தி வைத் தந்தது. ராஜத்துக்கும் பதிலுை வயசாச்சு இவளுக் கும் அவனுக்கும் கல்யாணத்தைப் பண்ணிடலாம். அப்புறம் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பி ஏற்பாடு செய்தாள். ஆல்ை, அவள் ஆசையே தீய்த்துவிட்டது. நம்பிக்கை கறுகி மண்ணுேடு மண்ணுகிவிட்டது. இதை எண்ணி நெடுமூச்செறிந்தாள் நீலாவதி, நேரம் ஒடிக்கொண்டிருந்தது. சாப்பிடவில்லையா என்று விசாரித் தவர்களிடமெல்லாம் ப்சு, என்ன சாப்பாடு வேண்டியிருக்கு" என்று விரக்தியோடு கூறினுள். கொஞ்சம் காப்பித்தண்ணி இருந்தால் கொடு என்று இரண்டு மூன்று டம்ளர் காப்பி குடித்துத் தீர்த்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/30&oldid=835991" இலிருந்து மீள்விக்கப்பட்டது