பக்கம்:பூ மரங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது நீலாவதி சதிருக்கும் அழகுக்கும் அன்புக்கும் நல்லமதிப்பு. அருமையான புகழ் செல்வமான வரவேற்பு. ஊர்ப் பெரிய மனிதர்கள், கனவான்கள், பண்ணையார்கள் எல்லோரும் நீலாவதியை பூஜித்தார்கள். அவள் வீட்டின் வந்து காத்துக் கிடந்தார்கள். சொத்தும் பணமும் நகைகளும் சேரச் சேர நீலாவதி தனது 'சின்னப்புத்தி'யை எண்ணிச் சிரித்துக் கொண்டது உண்டு. போயும் போயும் நாடகக் காரியாகணும்னு தினச் ? ۔ جمہ : ، عد۔ ہ ء ۔* گس-اساسی حساسخ گ சேனே! என்ன பிழைப்பு அது!’ சீரும் சிறப்பும் செழித்த வாழ்விலே திளைத்த நீலாவதி தனக்கொரு செல்வபதிப்பாக ராஜம் பிறந்தவுடன் வாழ்வின் பயனை அடைந்ததாக மகிழ்வுற்றதில் வியப்பில்லே அந்தப் பெருமையில் மூழ்கிய பாட்டி அலமேலுவும் "பரலோக பிராப்தி அடைந்தாள். - மனித மனம் எப்படி எப்படி யெல்லாம் மாறும் என்று யாரும் கணக்கிட முடியாது. சந்தர்ப்பங்களும் சூழ்நிலையும் மட்டுமல்ல காலமும் மனித உள்ளத்திலே, எவ்வளவோ விளையாடல்கள் பண்ணுகிறது. அதனுல் யார் எந்தச் சமயத் தில் எப்படி நடப்பார்கள், அவர்கள் நடத்தைக்குக் காரண காரியத் தொடர்புகள் ஏதேனும் உண்டா என்று அறுதியிட முடிவதில்லை. நீலாவதி விஷயமும் அந்த மாதிரித்தான் இளமைப் பருவத்தில் நாடக ராணியாக வேண்டுமென்று கனவு கண்டு, சதிராட்டப் புகழாகத் திகழ்ந்து, பணத்தோடு பணமும் சேர்த்து உல்லாசமாக வாழ்ந்த நீலாவதிக்கு முப்பத்தைந்து வயதானதும் அவள் மனுேபாவம் முற்றிலும் மாறுதலடைந் தது. பணம், பேரு இதில் எல்லாம என்ன இருக்கு: என்று அலுப்படையத் தொடங்கிள்ை. இப்போ இருக்கிறதை வைத்துக்கொண்டே இன்னும் ரெண்டு தலைமுறைக்குச் சாப் பிடலாம். இந்தப் பிழைப்பு பிழைத்துதான் ராஜம் சாப்பிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/34&oldid=836021" இலிருந்து மீள்விக்கப்பட்டது