பக்கம்:பூ மரங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது - } அவருக்குப் பதிவாகியிருந்த பெயர் பொன்னம்மா புருஷன்' என்பதுதான். கணவளுல் ஒளிபெறும் மனைவியும், மனேவியி குல் சிறப்புறும் கணவனும் உலகத்திலே மிகுந்து போயிருக் கிருர்கள். அதனல், செங்குளம் ஊரில் பொன்னம்மா புருஷன் என்ற பட்டப் பெயர் கிடைத்திருப்பது பிரமாத விஷயமாகத் தோன்ருமலிருக்கலாம் முதலில் ஆளுல் செங் குளம் வாசிகள் அப்படி நினைக்கவில்லே. பண்ணையாருக்கு எவ்வளவு கவனிப்பு அளித்தார்களோ அதைவிட அதிகமான முக்கியத்துவம் கொடுத்துக் கவனித்து வந்தார்கள் பொன் னம்மாளே. பூரீமதி சிவகுருநாத பிள்ளை என்று அழைக்கப்படவேண் டிய-ஆளுல் அதற்குமாருக பிள்ளைவாளுக்கே போன்னம்மா புருஷன் என்று சிறப்பு வரும்படியாகத் திகழ்ந்த-பொன் னம்மாள் அப்போதுதான் அந்தப் பக்கம் அடித்துக்கொண் டிருந்த நாகரிக வாடை தொட்டுச் சிலிர்ப்புறுத்திய புஷ்பம். தமிழ்நாட்டின் நரம்பு முடிச்சுகளாக மிளிரும் நகரங் களில் - இன்று எலெக்ட்ரிக் விளக்குகளும் இரண்டு மூன்று சினிமாத் தியேட்டர்களும், டவுன் பஸ்களும், அவசர நாகரிக மும், கலாசாலைகளும் உயிர் சின்னங்களாகக் கலகலக்கிற நகரங்கள் பலவற்றிலேகூட-நாகரிகம் அரும்பி மலர்ந்து கொண்டிருந்தது. அத்தகைய நகரம் ஒன்றிலே பிறந்து வளர்ந்து எட்டாவதுவரை படித்துப் பெருமையோடு வந்த வள் பொன்னம்மா பண்ணையாரின் இரண்டாந்தாரம். முதல் மனைவி இறந்து போனுள். இளைய மனைவி என்பதல்ை பொன் எம்மாள் அந்த வீட்டில்-அதாவது பண்ணையார் வாழ்வில்! தான்-தனி அந்தஸ்து பெற்றிருந்தாள். - - ”ரொம்ப ராங்கிக்காரிடீ யம்மா அவ...அவதான் அத்தப் பொன்னம்மா’ என்னும் மதிப்பை செங்குளத்தில் சம்பாதிக்க அவளுக்கு ரொம்ப காலமாகவில்லை: கல்யாணமாகி வந்த, புதிதில் புதுப் பெண்’ என்ற சலுகை காரணமாக கவனிக்கப் படாமலிருந்த பண்புகள் எல்லாம் நாளோட்டத்திலே பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/40&oldid=836033" இலிருந்து மீள்விக்கப்பட்டது