பக்கம்:பூ மரங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 金3 கோழிமுட்டைச் சிமினி விளக்கு-பால் வண்ணச் சிமி னியுள்ள பெட்ரூம் லேட்-ஏந்தி, தூக்கக் கிரக்கத்தோடு காட்சியளித்து நின்ற பொன்னம்மாள் பட்டணப் பிரவேசம் வீடு வந்து சேர இவ்வளவு நேரமாச்சா!' என்று கேட்டு விட்டுக் கொட் டாவிவிட்டாள். பட்டணப் பிரவேசமா! அது திரும்பி எவ்வளவோ நேரமாச்சே!” என்ருர் பிள்ளை. பின்னே ஏன் இவ்வளவு நேரமாம்?' என்று அலுத்துக் கொண்டாள் அம்மாள். 'இவ்வளவு நேரம் தூங்கிக்கிட்டுதான இருந்தே! அட ராவணன் தங்கச்சீ...இல்லேயில்லை, கும்பகர்ணன் தங்கச் சியே’’ என்று வியந்தார் பண்ணையார். 'துரங்கினதினலே என்னவாம்? நீங்க பாட்டிலே உங்க நீலாவதி யிருக்காளே நீலாவதி-அவசுடக் கூடக் கொஞ்சிக் கிட்டிருப்பீங்க. ராசா வருவாரு, வருவான்னு நான் இஞ்சி தின்ன குரங்காட்டம் முழிச்சுக்கிட்டிருக்கணுமாக்கும்!” என்று சினுங்கிளுள் சிங்காரி. "அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் ராணியம்மா! சுல் யாணப் பந்தல் தீப்பற்றி யெரிஞ்சு, ஊர்பூராக் கலகலத்துப் போக்சு. நீ என்னடான்னு துரங்கினேன்.கிறியே, அதுதான். எனக்கு ஆச்சர்யமாப் போச்சு!" என்று விளக்கினர். * : * .3, என்னது தீயா கல்யாண வீட்டுக் கொட்டகைப் பந் தலா! எப்படிப் புடிச்சுதாம்? தீயை அணேச்சாச்சுதா? - இன்னும் அவள் ஆயிரம் கேள்விகளை அடுக்கக்கூடாது. என்று கருணையினுல் நடந்ததைப் பூராவும் சொல்லி வைத் தார் பண்ணேயார். . ー。 அட எழவே இப்படியா நடக்கனும் கல்யாணம்’ என்று அதிசயித்தாள் பூர்மதி. --------

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/44&oldid=836040" இலிருந்து மீள்விக்கப்பட்டது