பக்கம்:பூ மரங்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தாழ்ச்சிகளே, வளர்ச்சிகளை எல்லாம் பற்றி ஆராய்ச்சிகளும், சிந்தனே நூல்களும் வெளிவருகின்றன, சமூக ஆய்வாளர் களும், மனிதகுலப் பிரச்னைகள் பற்றி சிந்திக்கிறவர்களும் வரலாற்று ஆர்வம் உடையவர்களும், தங்கள் தங்கள் நோக் இல் அணுகி அலசி, எழுதிவைக்கிருர்கள். அரை நூற்ருண்டு முடிந்ததும், நூற்ருண்டில் திருப்பம் என்றும், பத்துப் பத்து அருஷங்கன் நிறைந்தவுடன் அக் காலகட்ட நிகழ்ச்சிகளே மக்கன் மனுேபாவ வளர்ச்சிகளைக் கணித்தும் பலப்பல நூல் கன் வெளியிடப்படுகின்றன, இதர நாடுகளில்தான். இத்தியாவில் இந்த ரகமான முயற்சிகள் நடைபெற்றுள் ளதாக-நடைபெற்று வருவதாக-எனக்குத் தெரியவில்லை. தமிழில் இவ்வித நூல்கள் தலைகாட்டவே இல்லை என்பது எனக்கு திச்சயமாகத் தெரியும். தமிழ்நாட்டில் மக்கள் வாழ்விலும், பண்பாட்டிலும், மனுேபாவத்திலும் காலம் நிகழ்த்தி வந்துள்ள மாற்றங்கள் குறைவானது அல்ல. சமூகங்களின் உயர்வு தாழ்ச்சிகளிலும் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் எத்தனே எத்தனையோ. பொருளாதார பலத்தினுல் செழிப்புற்று வசதியாகக் காலம் ஒட்டி வந்த சில சமூகங்கள் மதிப்பிழந்து போயின. தொழில், வியாபாரத் துறைகளில் வெற்றி கண்டு, பணபலம் பெற்று சில சமூகங்கள் முன்னுக்கு வந்துவிட்டன. பிறப்பி குல் உயர்வு பேசி, சகல வழிகளிலும் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்துவதில் ஆர்வம் காட்டிய சில சமூகங்கள், கால வேகத்தில் மக்கள் மத்தியில் மலர்ச்சி பெற்ற அரசியல் விழிப்பு, அறிவு விழிப்பு காரணமாக, வலு குறைந்து செல் வாக்கு குறைத்து, செயலிழந்து காணப்படுகின்றன. தொழில் வாய்ப்புகளும், உத்தியோகவசதிகளும் செய்து தருகிற தாரா ளப் பணப்புழக்கம் காரணமாக பலரது குடும்ப வாழ்விலும், தனி மனித மனுேபாவத்திலும் விரும்பத்தக்கனவும் வேண் டத் தகாதனவுமான பலப்பல மாற்றங்கள் தலையெடுத் துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/5&oldid=836052" இலிருந்து மீள்விக்கப்பட்டது