பக்கம்:பூ மரங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 葛好 அப்படியே செய்யேன். இன்னும் கொஞ்சம் காப்பி சாப்பிடு. அப்புறம் குளிச்சிட்டுச் சாப்பிடலாம் என்ருள் நீலாவதி. கொஞ்ச நேரம் படுத்திரு. தண்ணி கிண்ணில் லாம் எடுத்து வச்சிட்டு, உன்னேக் கூட்டிக்கிட்டுப் போறேன்" என்று பின்கட்டுக்குப் போளுள் அவள். லக்ஷ்மியும் பின் தொடர்ந்தாள். இருக்கும். இந்தக் காலத்திலே எது நடக்கும் நடக்கா துன்னு ஒண்ணுமே நிச்சயமாச் சொல்றதுக்கில்லே. என்ன லச்சுமி?’ என்று கேட்டாள். இருக்கும் அம்மா. எனக்கும்கூடச் சந்தேகம்தான். பண்ணையாரய்யா திட்டமாகச் சொன் ஞக. இன்னும் பல பேரு பேசிகை. அர்த்தமில்லாமச் சந்தேகிச்சு என்ன பண்ணுன்னுதான்...” லட்சுமி முடிக்கவில்லை. அப்படி நாமல்லாம் நினைக்கப் போய்த்தான் நமக்கு எதுவும் தெரியிற தில்லே. பாரு, எங்க அம்மை திட்டவட்டமா எதையாது சொல்லுவா; உறுதியாச் சொல்லுவா. கேட்கிறவங்களுக்கு உளறலாப்படும். ஆளுல் அதுதான் கடைசியிலே உண்மையா நடக்கும். ராசம்கூட அவ ஆச்சி மாதிரி...' என்று தலையிட்டாள் நீலாவதி. "ஆள் நேரடியாகத் தீ வைக்காமலே தூர இருந்து ஏவி விட்டுட்டா, குப்புன்னு புடிச்சிக்கிடுமாமில்லா? என்று கேட் டாள் லக்ஷ்மி. - ஆமா ஏவல்னு சொல்லுவாங்க அதை நல்ல மந்திர வாதி ஏவி விட்டுவிட்டால், தி பிடிக்கும். கல்லு வந்து விழும். இன்னும் என்னென்ன வெல்லாமோ நடக்கும். எவ்வளவோ நமக்குப் புரியாத சக்திகள் இருக்கு. எங்க அம்மா கதை கதையாய் சொல்லுவா..சரி, இந்தச் செப்புப் பானையைப் பிடி. அங்கணத்துப் பக்கத்திலே வைப்போம். சோப்பு டப்பாகை எடுத்திட்டு வா’ என்னுன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/56&oldid=836068" இலிருந்து மீள்விக்கப்பட்டது