பக்கம்:பூ மரங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

あ சமூக வாழ்வில், குடும். நிலேயில், தனி நபர் நோக்கில் உள்ளுறப் பரவிவந்துள்ள இந்தவிதமான மாறுதல்கள் போக, மேலோட்டமாகப் பார்க்கிறவர்களுக்குக்கூடப் பளிச் செனப் புலணுகும் மாறுதல்கள் எவ்வளவோ பிறந்துள்ளன. ஒரு தலைமுறை காலத்திற்குள்ளாக நிகழ்ந்தவை மிகப்பல. 1947-ம் வருஷத்துக்குப் பிறகு பரவியுள்ள மாறுதல்கள் கூட அதிகமானவைதான். - இன்று சகஜமாகவும் சர்வசாதாரணமாகவும் காணப்படு கிற பல விஷ:ங்கள் அபூர்வ அதிசயங்களாக மக்களுக்குக் காட்சி அளித்த காலமும் உண்டு; அவை அடியோடு இல்லா மலே இருந்த காலமும் உண்டு, இது பன்னெடுங்காலத்துக்கு முந்திய வரலாறு அல்ல; முப்பது முப்பதைந்து வருஷங்க ளுக்கு முந்திய சம்பவம்தான் என்பது இன்றையத் தலேமுறை. யினருக்கு நம்புவதற்குச் சிரமமான விஷயமாகக்கூடத் தோன்றலாம். உதாரணத்துக்கு, எலெக்ட்ரிக் விளக்குகளேயே குறிப்பிட லாமே. இப்போது, பிறக்கிற குழந்தைகள் கூட எலெக்ட்ரிக் வெளிச்சத்திலே தான் கண்விழிக்கின்றன. ஆணுல், முப்பத் தைந்து நாற்பது வருஷங்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் பல பெரிய நகரங்களில் கூட எலெக்ட்ரிக் லேட் எட்டிப் பார்த்த தில்லை. முனிசிபல் நகரங்களில் கியாஸ் லேட்டுகள் குறை வாகவும், லாந்தர் கம்பங்களின் மீது ஏற்றி வைக்கும் மண் எண்ணெய் விளக்குகள் மிகுதியாகவும் தெருவிளக்குகளாகக் காட்சி தந்தன. - - - - சிற்றுார்களிலும் கிராமங்களிலும் வெறும் கல்துரண்கள் மட்டும் நின்ற காலமே அதிகம், சந்திகளில் நின்ற கம்பங்கள் மீது, வெளியூர் லண்டிக்காரர்கள் தங்கள் சோற்றுச் சட்டி யையும் நோக்கால் குச்சிகளையும் பாதுகாப்பாக வைப்பார் கள். அப்படி அவர்கள் வைப்பதற்கு வசதியாக அக்கம்பங்கள் நிறுத்தப்பட்டுள்ளனபோலும் என்று வருங்கால ஆராச்சி யாளர்களும், உண்மை விஷயம் அறியாத சிறு பிள்ளைகளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/6&oldid=836075" இலிருந்து மீள்விக்கப்பட்டது