பக்கம்:பூ மரங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 莎房 கத்திலே வந்து நின்ன மாதிரித் தோணுச்சு. முகத்தை தலே யணையிலே அழுத்திப் படுத்துக்கிடந்தேன் கொஞ்ச நேரம். கல்யாண வீட்டுப் பக்கம் ஒருத்தன் வேகமாப் போனது மாதிரித் தெரிஞ்சுது, பிறகு தீ, தீன்னு கத்திட்டு ஒடிஞன். ஆளு. அவன் கல்யாணவீட்டிலேருந்து கத்திக்கிட்டு வந்து. தெரு மூலையைத் திரும்பிப் போயிட்டான். பிறகு நம்மதெரு பண்டாரத்தய்யா அடிச்சுப்புரண்டு கத்திக்கிட்டு ஒடிஞரு, தீ தீன்னு. எனக்கு ரொம்பப் பயம். படுக்கையைச் சுருட்டிக் கிட்டு வேகமாத் திண்ணையிலேறி அம்மா! அம்மான்னு கத்தி னேன். ' - அவன் தாய் சொன்னுள், அப்பதான் தீ, தீங்கிற கூப் பாடுக.ட என் காதிலே விழுந்தது. இவன் அலறி அடிச்சு கூப் பிடவே, நான் என்னவோ ஏதோன்னு வந்து பார்த்தேன். அதுக்குள்ளே கும்பல் ஒடிச் சேர்ந்துட்டுது கல்யாண வீட்டுப் பந்தல் கிட்டே ஊம்" என்று தலையசைத்தார் அவர் நான் நல்ல தாக்கம் தாங்கியிருக்கிறேன். அப்போ எனக்கு இதெல்லாம் தெரி யாது. நீ எழுப்பினபோது தான் தெரியும் அப்போதான் தி பாதிக்கு மேலே எழுந்து பிடிச்சுப் பெரிசாயிட்டுதே' என் முர். சந்தேகமேயில்லை. எவனேதான் தீ வச்சிருக்கான்? என்ருர், தனக்கே உறுதியாகச் சொல்லிக்கொள்வது போல, "முதல்லே தீன்னு கத்திட்டு எதிர்பக்கமா ஓடினவன் எப்படி யிருந்தான் தெரியுமா, சுந்தரம் என்று மகனிடம் கேட் டார். அவனுக்கு என்ன தெரியும்! அவன்தான் பயந்து போங் கிடந்திருக்கானே' என்ருள் தாய். 'ஆன அவன் ஒடும்போது பார்த்தேனே. அதுக்குப்பிறகு தானே நான் எழுந்திருச்சு திண்ணேக்கு ஓடியாந்தேன்!” என்று பெருமைப்பட்டுக் கொண்டான் பையன். 'அவன் யாரு மாதிரி இருந்தான்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/64&oldid=836085" இலிருந்து மீள்விக்கப்பட்டது